சந்திரலேகா சீரியல் நாயகிகளின் அர்ப்பணிப்பு – கண்டிப்பா பாராட்டக்கூடிய விஷயம் தான்.

0
510
chandralekha
- Advertisement -

சந்திரலேகா சீரியலுக்காக நடிகைகள் செய்த அர்ப்பணிப்பு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதுவும் கொரோனா காலகட்டத்திலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சீரியல்களை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவி. இந்த சேனலில் பல மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி குடும்பங்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் சந்திரலேகா. இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

சந்திரலேகா சீரியலில்:

சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வருகிறது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இந்த கதையின் நாயகி சந்திரா. மேலும், சீரியலில் சந்திரா மற்றும் லேகா இருவரும் ஆரம்பத்தில் எதிரிகளாக இருந்தாலும் பின் தன் குடும்பத்திற்காக மாறிவிட்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இருவரின் கணவர்களும் துணையாக இருக்கிறார்கள்.

சந்திரலேகா சீரியல் கதை:

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.
இருந்தாலும், இடையில் சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றதால் பலரும் சீரியல் எப்போதும் முடியப்போகிறது என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதோடு சீரியலில் பல பிரபலங்கள் மாறி இருந்தாலும் கதை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அதுட்டுமில்லாமல் சந்திரலேகா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

சந்திரலேகா சீரியல் முடிவு:

மேலும், இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இந்த சீரியல் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் 2250 க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து இருக்கிறது. தற்போது இந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

சீரியல் நடிகைகள் குறித்த தகவல்:

இந்நிலையில் சந்திரலேகா சீரியல் நடிகைகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்திரலேகா சீரியல் தொடங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் சுவேதாவும், லேகா என்ற கதாபாத்திரத்தில் நாகஸ்ரீ நடித்து வருகிறார்கள். சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை இவர்கள் சீரியல் நடித்து வருகின்றனர். இதனால் இவர்களின் அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று கூறி சோசியல் மீடியாவில் இவர்களுடைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement