சந்திரமுகி படத்தில் வந்த பொம்மிய ஞாபகம் இருக்கா ? அவருக்கு திருமணம் முடிந்தது. இதோ புகைப்படம்.

By Rajkumar · 14/9/2021

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தில் பொம்மியாக நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "சந்திரமுகி" படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட உருவாக இருக்கிறது.

சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை 'பொம்மி' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை பொம்மி தான்.'பொம்மி' குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாக நடித்துள்ளார் இந்த குழந்தை.

இதையும் பாருங்க : இந்த ஆட்சி தொடர்ந்தால் கடவுளாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாதுனு சொன்ன ரஜினி, தலைவி பார்த்துவிட்டு என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்தார். தற்போது இவருக்கு திருமணம் முடிந்து உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

அதற்கு முன்னர் இயக்குனர் வாசு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் நடிக்கிறார். அதே போல இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சி போலத்தான் இருக்கும் என்றும் கூறி இருந்தார் வாசு ஒரு வேலை அப்படி இருந்தால் முதல் பாகத்தில் பொம்மியாக நடித்த பிரகர்ஷிதா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரஹர்ஷிதா, தற்போது படிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் கம்பெனி ஒன்றின் பணிகளை செய்து வருகிறேன். அதே போல பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full