இந்த ஆட்சி தொடர்ந்தால் கடவுளாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாதுனு சொன்ன ரஜினி, தலைவி பார்த்துவிட்டு என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
5025
thalaivi
- Advertisement -

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தற்போது வெளிவந்து உள்ள படம் தலைவி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் தான் ‘தலைவி’.

-விளம்பரம்-

படத்தில் ஜெயலலிதா அவர்கள் தன் பள்ளிப் படிப்பைத் தொடங்கி பின் அரசியலில் நுழைந்து முதலமைச்சராக நாட்டை ஆண்ட பாதை வரை என அனைத்தையும் இயக்குனர் விஜய் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

- Advertisement -

மேலும்,தலைவி படம் பார்த்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் தலைவி படம் குறித்து கூறி உள்ளார். சமீபத்தில் ரஜினிக்கு தலைவி படம்  ஸ்பெஷலாக திரையிடப்பட்டு இருக்கிறது. தலைவி படம் குறித்து ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் ஏ.எல். விஜய்யை போனில் தொடர்புகொண்டு படத்தையும், பட குழுவையும் பாராட்டி உள்ளார்.

ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியதை குறித்து சோசியல் மீடியாவில் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியால் மக்கள் வெறுப்புற்றிருந்த நேரத்தில், இந்த ஆட்சி தொடர்ந்தால் கடவுளாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என்று ரஜினி விமர்சித்தார். அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார். இந்த சிறப்பு வாய்ந்த சம்பவம் தலைவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement