ADKவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரை கண்டித்த பிக் பாஸ் – வைரலாகும் வீடியோ

0
391
- Advertisement -

முன்னதாக பிக் பாஸ் இந்த சீசன் போட்டியாளரான ADKவை அழைத்து ஸ்மோக் செய்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவேன் என்று கூறிய நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் மற்றொரு போட்டியாளரை கண்டித்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது அதற்க்கு காரணம் இன்னமும் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதற்கு தகுந்தாற் போல பிக் பாஸும் பல டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த சீஸனின் மற்ற பிக் பாஸ் சீசன்களை போல இல்லாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்காததால் அசீம், விக்ரமன், ஷிவுன், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், ரட்சிதா, மைனா நந்தினி என 8 போட்டியாளர்களில் கண்டிப்பாக அசீம், விக்ரமன், ஷிவின் இவர்கள் மூவரும் பைனலிஸ்டில் இருப்பார்கள் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது,

- Advertisement -

மேலும் மற்ற போட்டியாளர்கள் டாஸ்குகளில் விளையாடுவதை பொறுத்தே அவர்களில் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்றிருந்த நிலையில் பல விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில டாஸ்கின் போது ADK பல முறை மயங்கி விழுந்ததால் மருதுவர்கள் இவரை சோதித்து ஸ்மோக் செய்ய வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ADK தொடர்ந்து ஸ்மோக்கிங் ரூமிற்க்கு சென்று வந்ததால் பிக் பாஸ் ADKவை அழைத்து அறிவுரை கூறினார். மேலும் இனி ஸ்மோக் செய்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவதாக எச்சரித்தார்.

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் டாஸ்கில் வெற்றி பெரும் போட்டியாளர் கடைசி வாரத்திற்கு நேரடியாக எந்த நாமினேஷனும் இல்லாமல் சென்று விடுவார். இதனால் ஒவ்வொரு போட்டியாளரும் கடுமையாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த டாஸ்கில் கயிற்றில் பண்ணை கட்டி அதனை கைகளை உபயோகிக்காமல் கால்கள் பயன்படுத்தி உன்ன வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை.

-விளம்பரம்-

இந்த நிலையில் போட்டியாளர்கள் அந்த டாஸ்க்கிற்கு தயாராகி கொண்டிருக்கும்போது ஷிவின் “red floral maxi dress” அணிந்திருந்தார். இதனால் பிக் பாஸ் ஷிவினிடம் டாஸ்க் தொடங்குவதற்கு முன்னர் வேறு உடை மாற்ற வேண்டும் என்றால் இப்போதே மாற்றிவிடுங்கள் என்று கூறினார். இதனையடுத்து ஷிவினும் பேண்ட் போட வேண்டுமா? என்று சக போட்டியாளர்களிடன் கேட்டார் ஷிவின்.

இந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகவே ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “அப்போ பிக்பாஸ் கூட ஒரு பிற்போக்கு ஆண் பேரினவாத பூமர் செலக்டிவ் நியாயஸ்தான்-ஆ அக்காவின் மேல் ஆதிக்கத்தை குறிவைக்கதே பிக் பாஸ்” என்று ஒருவர் கூறியிருந்தார். இதற்கு அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் கால்களை உபயோகிக்க வேண்டும் என்பதினால் தான் பிக் பாஸ் உடையை மாற்ற சொன்னார் என்று பிக் பாஸிற்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பிக் பாஸ் இதே போன்று ADKவின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அறிவுரை கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement