தங்களது 8 வருட வாழ்க்கையில் நடந்ததை கூறி சாயா சிங்கை கண் கலங்க வைத்த கிருஷ்ணா.

By Rajkumar · 4/1/2020

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அப்படி எதிர்பார்த்ததை விடவும் அமோக வெற்றிபெற்ற சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியல் 5வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=KJ1oEIvXg6U

இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் பிரகாஷாக நடித்திருப்பவர் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக சத்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வாணி போஜன். இவர்கள் சீரியலில் மட்டுமே ஜோடி. நிஜத்தில் கிருஷ்ணாவின் மனைவி திருடா திருடி பட கதாநாயகி "மன்மதராசா" பாடால் பேமஸ் சாயாசிங் தான். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயாசிங் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் பாருங்க : 5 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன். அதுவும் சன்னி லியோன் பட இயக்குனரின் படைப்பில்.

ஆகையால் திருமணத்திற்குப் பின்னர் சீரியல் பக்கம் திரும்பிய சாயாசிங் திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அதில் தனது கணவர் கிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் சன் குடும்ப விருதுகள் விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு தங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களையும் பகிர்ந்து கண்கலங்கி உள்ளார்கள்.

இந்த மேடையில் பேசிய சாயாசிங்கின் கணவர் கிருஷ்ணா இந்த எட்டு வருடங்களில் அவளுக்கு நான் நிறைய கஷ்டங்களை கொடுத்திருக்கிறேன்,, நிறைய வைத்திருக்கிறேன் என்று கூறி சாயா சிங்கை கண்கலங்க வைத்துவிட்டா.ர் பின்னர் தனது அன்பு மனைவிக்கு மண்டியிட்டு ரோஜா கொத்தை அளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் .இதனால் மகிழ்ச்சி அடைந்த சாயாது எனது வாழ்வில் இவரை விட ஒரு சிறந்த துணை கிடையாது என்று கண்கலங்கியபடி பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full