5 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன். அதுவும் சன்னி லியோன் பட இயக்குனரின் படைப்பில்.

0
3588
jeevan
- Advertisement -

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பின்னர் ஹீரோவாக நடித்த மச்சக்காரன் போன்ற படங்கள் தோல்விப்படமாக அமைந்தது.

-விளம்பரம்-
svas

- Advertisement -

இறுதியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 5 கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஜீவன் தற்போது ‘பாம்பாட்டம்’. என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக இந்த படம் உருவாக இருக்கிறது. 6.2, ஓரம்போ, வாத்தியார் படங்களை இந்த தயரிப்பு நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தினை வி.சி வடிவுடையான் இயக்க இருக்கிறார்.

வி.சி வடிவுடையான் தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கிவருகிறார் குறிப்பிடத்தக்கது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில்  இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும், ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முண்ணனி  கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை  வடிவமைக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-
Image result for tamil actor jeevan

இது ஒரு புறம் இருக்க அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளது.

Advertisement