Prank என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசம் – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேரரை தட்டி தூக்கிய போலீசார்.

0
1713
prank

பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்து உள்ளனர் கடந்த சில காலமாகவே சமூகவலைதளத்தில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் எனப்படும் செயலியின் மோகம் மிகவும் அதிகரித்துகாணப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் எல்லைமீறி நடந்து கொண்டு வந்தனர் மேலும், ஒரு சிலர் காவல் துறையினரால் தண்டிக்கப்படும் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பாதகாப்பு அம்சம் காரணமாக டிக் போன்ற பல செயலிகள் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீதான விசாரணையை விசாரித்த நீதிபதிகள், ”தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் நமது குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான ’ப்ளூ வேல்’ கேம் குறித்து நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் மத்திய அரசு அந்த விளையாட்டுக்குத் தடை விதித்தது. இதுபோல் சமூகத்துக்கு தீங்கு விதிக்கும் செயலிகளை அரசே முன்வந்து தடைவிதிக்க வேண்டும்.

- Advertisement -

Prank show போன்ற வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது” என்று அறிவித்து இருந்தது. இருப்பினும் யூடுயூபில் பல்வேறு சேனல்கள் Prank showவை செய்து வருகிறது. அதிலும் ஒரு சில யூடுயூப் சேனல்கள் Prank show என்ற பெயரில் பொது மக்களை தொல்லை செய்தல், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல் என்று எல்லை மீறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் யூடுயூபில் Chennai Talk என்ற சேனலில் கடந்த சில வாரங்களுக்கு முன் 2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement