மக்கள் திலகத்தின் மறு உருவமே, விவேகானந்தரின் விஜயமே – அடைமொழிகளால் அடிக்கடி ஷாக் கொடுக்கும் விஜய் ரசிகர்கள்.

0
830
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் அஜித் அரசியலுக்கு தான் வரமாட்டேன் என்று ஆணித்தனமாக சொல்லி விட்டார். ஆனால், விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

-விளம்பரம்-

இதில் விஜய் தனது படங்களில் அரசியல் கலந்த வசனங்களை பேசி அரசியலுக்கு வருவாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். அதே போல விஜய்யின் அரசியலுக்கு அவரது தந்தை எஸ் ஏ சியும் மிகவும் வலுவான அஸ்திவாரத்தை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் . சென்னை காஞ்சிபுரம் எல்லையில் ஒட்டப்பட்டுள்ள மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக என்ற போஸ்டர்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்புகளில் விஜய்யை வைத்து உருவாக்கியுள்ள இந்த போஸ்டரை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை உருவகப்படுத்தும் தோற்றத்தை கணவன்-மனைவி போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement