சேரப்பா இனி வேறப்பா.! லாஸ்லியா மற்றும் சேரனை கலாய்த்த கமல்.!

0
3874
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்று இருந்தது நேற்றைய நிகழ்ச்சியில் மூலம் உறுதியானது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஓட்டிங்கில் அபிராமி தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வந்தார். மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் அபிராமிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்தன.

தற்போது வெளியாகியுள்ள நான்காவது ப்ரோமோவில் கமல், லாஸ்லியா மற்றும் சேரன் இருவருக்கும் இருக்கும் உறவு குறித்து நக்கலாக பேசியுள்ளார். அதில் சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் முதலில் எப்படி இருந்தார்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை சூசகமாக சுட்டி காண்பித்துள்ளார் கமல்.

-விளம்பரம்-

Advertisement