ஆழ்துளை கிணற்றில் உள்ள சுர்ஜித் நிலை குறித்து தமிழகமே கதிகலங்கி இருந்தது. மேலும், போர்வெல் எந்திரங்களும் தீவிரமாக சுர்ஜித்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என முயற்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். இறுதியாக சுர்ஜித் 86 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார் என்ற தகவலும்வெளியாகி இருந்தது . .திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 3 நாட்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்துவந்தனர். அரசாங்கமும்,மக்களும். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய்முடிந்தது . இறுதியாக குழந்தையை மீட்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுவந்தனர். ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக சென்று கொண்டுஇருந்தது.

Advertisement

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டுவந்தனர். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாகியது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் போராடிவந்தனர்.

மேலும், குழந்தை மூச்சு விடுவதற்கு oxygen மற்றும் குழந்தை பயமில்லாமல் இருப்பதற்காக உபகரன்கள் எல்லாம் செய்துவந்தனர். மூன்று நாட்கள் கடந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. சாதி,மதம்,மொழி,இனம் எல்லாவற்றையும் மறந்து தமிழக மக்கள் சுர்ஜித் நிலை குறித்து பிராத்தனையும்,பூஜைகளும் செய்துவந்தனர். மக்கள் சுர்ஜித் நலமுடன் மீண்டும் வரவேண்டும் என்றும், எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என தமிழக மக்கள் கலங்கிப் போய்இருந்தனர்.

Advertisement

ஆனால், நம் அனைவரயும் அதிர்ச்சியாக்கும் விதத்தில் சில மணி நேரத்திற்கு முன்னர் சுஜித் உயிர் பிரிந்ததாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுர்ஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் தெரிவித்தார். பல மணி நேரம் போராடியும் சுஜித்தை உயிரோடு மீட்க முடியாமல் போனதை ஒட்டி அனைவரும் தற்போது கனத்த இதயத்துடன் மீள முடியா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Advertisement