'40 வயசு, பாட்டி ஆக போற வயசுல, IVF தான் உதவனும்' - நயன்தாராவின் குழந்தை பெரும் தன்மையை விமர்சித்த மருத்துவர். போட்டோவை போட்டு நாறடித்த சின்மயி.

By Ajju · 13/6/2022

சமீபத்தில் திருமணம் முடித்த நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர் ஒருவர் போட்ட கமெண்டை பகிர்ந்து இருக்கிறார் சின்மயி. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ. அதே அளவு அவரின் கடந்த காலத்தை எல்லாம் குறிப்பிட்டு சில மோசமான கமெண்டுகளும் வந்தது. அந்த வகையில் மருத்துவர் ஒருவர் 'இதை கமன்ட் செய்ய ஆவலுடன் இருந்தது. இவரின் நடிப்பு திறமையை நான் மதித்தாலும், 40ஐ நெருங்கி பாட்டி வயதை வயதில் இவர் எப்படி குடும்பம் குழந்தையை பெறப்போகிறார் என்று பாவமாக இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF ) இவருக்கு உதவும் என்று நம்புகிறேன் ' என்று மோசமாக கமன்ட் செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : வடிவேலுவால 18 நாள் சும்மா இருந்தேன், 60,000 வீனா போச்சி, என் காட்சிய கூட நீக்க சொன்னாரு - வெற்றிகொடிகட்டு பெஞ்சமின்.

மருத்துவர் போட்ட கமன்ட் :

இப்படி ஒரு நிலையில் பின்னணி பாடகி சின்மயி, இவரின் இந்த பதிவை பகிர்ந்து அவரின் விவரங்களையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் 'மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், இதை நான் அனுப்பினேன். ஒரு நடிகை திருமணம் முடிந்து இருக்கிறது. அதை பார்த்து இந்த மருத்துவர் இப்படி ஒரு கேவலமான கமெண்டை போட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

சின்மயி போட்ட பதிவு :

ஏற்கனவே 37 வயதாகும் நயன்தாரா 'Surrogacy' முறையயில் அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக செய்திகள் சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக 'Surrogacy' 40 வயதை கடந்தவர்களும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அல்லாத குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதா நபர்களே இந்த 'Surrogacy' முறைப்படி குழந்தையை பெற்றுக்கொள்வார்கள்.

'Surrogacy' முறையில் குழந்தை பெற்ற நடிகைகள் :

பொதுவாக இந்த 'Surrogacy' பாலிவுட் துறையில் தான் மிகவும் அதிகம். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி சிந்தா போன்றவர்கள் இந்த 'Surrogacy' முறைப்படி தான் குழந்தை பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருமே 40 வயதை கடந்த பின்னரே இந்த முடிவை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சமீபத்தில் கூட பிரியங்கா சோப்ரா கூட 'Surrogacy' முறைப்படி குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயனின் 100 பட டார்கெட் ?

ஆனால், 37 வயதாகும் நயன்தாராவின் இந்த முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வி. ஏற்கனவே நடிகை நயன்தாரா 100 படங்களில் நடித்த பின்னர் தான் தனது திருமணத்தை செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது நயன்தாரா 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இன்னும் 3 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்தால் கூட 40 வயதை அவர் நிச்சயம் நெருங்கிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full