நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூச்சி லீக்ஸ் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்மயி..!

0
547
Suchileaks

கடந்த சில நாட்களாக கவிஞ்ர் வைரமுத்து மீது சினமயி முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தான் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டிற்கு முதன் முறையாக இன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டார் வைரமுத்து.

பாடகி சினமயி வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாக இருந்து வந்தாலும், ஒரு சிலர் சின்மயி குறித்து மோசமான ட்வீட் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகி சுசித்ரா, சூச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுசி லீக்சில் சிக்கிய பிரபலங்களில் பாடகி சின்மையும் ஒருவர் ஆனால், சுஜி கூறிய குற்றச்சாட்டை மறுத்தார் சின்மயி. இந்நிலையில் தற்போது வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டை முன் வைத்தும் மீண்டும் சுஜி லீக்ஸ்சை சிலர் தோண்டி எடுத்து சின்மையை வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் இதற்காக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சின்மயி