மோகன் ஜி படத்தில் பாடியது பற்றி பாடகி சின்மயி போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார். தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
திரௌபதி 2 படம்:
மேலும், இந்த படத்தின் எம்கோனே என்ற முதல் பாடல் இன்று மாலை வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலை பாடகி சின்மயி பாடியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமூக பிரச்சனைகளை குறித்து பேசும் பாடகி சின்மயி ஜாதிய படங்களை இயக்கும் மோகன் ஜி படத்தில் பாடுவதா? என்றெல்லாம் பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு பாடகி சின்மயி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=uh8s96m33Wc
சின்மயி பாடல்:
அதில் அவர், ஜிப்ரான் எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவருடைய அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தால் வழக்கம் போல நான் சென்று பாடிவிட்டு வருவேன். அப்படித்தான் இந்த பாடலையும் பாட ஜிப்ரான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. நான் சென்றபோது ஜிப்ரான் அங்கு இல்லை. அவர் எப்படி பாட வேண்டும் என்று சொல்லி இருந்தாரோ, அப்படியே பாடிவிட்டு நான் வந்து விட்டேன். இப்போதுதான் நான் பாடியது திரௌபதி 2 படத்தில் தான் என்று தெரியவந்தது.
At the outset, my heartfelt apologies for Emkoney.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 1, 2025
Ghibran is a composer I have known for 18 years since my jingle singing days. When his office called for this song, I just went & sang as I usually do. If I remember right, Ghibran wasn't present during this session - I was…
சின்மயி மன்னிப்பு:
இது என்னுடைய சித்தாந்தங்களுக்கு எதிரானது என்பதால் நான் பாடியே இருக்க மாட்டேன். மோகன் ஜி படம் என்றால் கண்டிப்பாக பாட ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். இதுதான் உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையே இயக்குனர் மோகன் ஜி, திரௌபதி 2 படத்தில் என்னுடன் பணி புரிந்த எந்த தொழில்நுட்ப வல்லுனர்களையும், நடிகர்களையும், நடிகைகளையும் குறி வைக்காதீர்கள். என்னுடைய படம் எதை பேசினாலும் அது என்னுடைய சொந்த படைப்பு மற்றும் கருத்தியல். உங்கள் இலக்கு நான்தான் என்று கூறியிருக்கிறார்






