தல வெறியன்,ரத்தம்னு சொல்றவங்க இப்படியா பேசுவாங்க.!சின்மயி ட்வீட்.!

0
437
Chinmayi

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பின்னணி பாடகி சின்மயி. சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் #metoo என்ற ஹாஷ் டேக் வைரலானதற்கு காரணமும் இது தான்.

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கான ஆதாரத்தை இதுவரை சின்மயி காண்பிக்கவில்லை மேலும், ஏன் அப்போதே சொல்லவில்லை என்று பலரும் சின்மயி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், சின்மயியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தினமும் பல்வேறு மெசேஜ்கள் வருகிறது. இதனை அவர் பல முறை தனது சமூக வளைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருக்கும் தல பக்தன் பிரகாஷ் என்பவர் சின்மயியை மோசமாக திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்த சின்மயி, ஒரு நடிகரின் ரத்தம்/உயிர்/குடும்பம்/சகோதரர் என்று கூறும் ஒரு பெண்ணிற்கு இப்படி தான் சமூக வளைத்தளத்தில் நடத்துவர்களா.எனக்கும் ராகுல் ப்ரீத் சிங் போன்றவர்களுக்கும் வரும் மெசேஜ்களை காண்பித்தாள் அனைவரும் மூழ்கி போவீர்கள்.

-விளம்பரம்-
Advertisement