நான் ஜாதி வெறியர், ஜாதி திமிர் கொண்டவள் – தன்னை ‘மாமி’ என்று குறிப்பிட்டதால் கடுப்பான சின்மயி.

0
7954
chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இனைய வாசி ஒருவர் சின்மயியை கேலி செய்து மீம் ஒன்றை போட்டு, அதில் சின்மயியை மாமி என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : சிவாலயத்திற்குள் செருப்பு போட்டு சென்ற திரிஷா – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம். மணிரத்னத்தை கைது செய்ய வேண்டும் என்று புகார்.

- Advertisement -

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி, அது என்னவோங்க, ஜாதி ஒழிக்கறார்களாம், எனக்கு ஜாதி திமிராம். அதே லேன்ல ‘மாமி’ ஆனா இந்த ஜாதி வெறி புடிச்சவங்க சாதிய ஒழிக்கறார்களாம் எல்லாம் அதே மாமாஸ் தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும், இவங்க குரூப்ல ஒருத்தரை குறை சொல்லி விட்டால் போதுமே இவங்க கைக்கூலி, அவங்க ஜாதி வெறி அப்படி இப்படினு எல்லாம் உருட்ட முடியுமோ உருட்ட வேண்டியது.

இப்படித்தான் ஒரு சைக்கோ பத்து வருஷம் முன்னால உருட்டினான். எப்ப பார்த்தாலும் கொச்சை படுத்தி பேசறது தான் வேலை. இன்னிக்கி இந்த சைக்கோ ஒரு அரசியல் கட்சியில் பெரிய போஸ்டிங். நான் இப்படித்தான், இந்த ஆணியை எந்த சுத்தி வெச்சு வேணாம் தட்டுங்க நிறைய பார்த்தாச்சு என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மற்றொரு பதிவில், என் கருத்து பிடிக்கலனா விமர்சனம் பண்ணு மதிக்கணும் நா மதிக்கிற தன்மை எனக்கு இருக்கு சும்மா விமர்சனம் செய்வது ஒரு ஃபேஷன் பிளம்பர் அவனுக்கும் நல்ல எண்ணத்துல சொல்ற அவனுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியும் நிறைய பார்த்தாச்சு மாமி அது இதுன்னு சொன்னா உனக்கெல்லாம் மரியாதையே கிடையாது நியாயம் நீதி நிலா உறுத்தாத செய்றதெல்லாம் மண்ணாங்கட்டி தான் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.

Advertisement