உன் ‘சுச்சி லீக்ஸ்’ வீடியோ வேண்டும் – ஆபாச மெசேஜ் செய்த நபரின் குடும்ப புகைப்படத்தை போட்டு வெளுத்து வாங்கிய சின்மயி.

0
1253
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.

- Advertisement -

சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போல சின்மயிக்கு பலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் வருகின்றனர். ஆனால், மற்றவர்களை போல அல்லாமல் தனக்கு ஆபாச மெசேஜ் செய்யும் நபர்களுக்கு தக்க பாடம் கத்துக்கொடுத்துவிடுகிறார் சின்மயி.

அந்த வகையில் சமீபத்தில் சின்மயிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் செய்துள்ளார். அதில், உங்களுடைய சுச்சி லீக்ஸ் வீடியோ வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த நபர் அனுப்பிய அந்த மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டதோடு அந்த நபர், தன் பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘என்ன ஒரு லவ் பாய், இவரை வளர்த்தவர்கள் தான் பாவம் ‘என்று குறிப்பிட்டுள்ளார் சின்மயி.

-விளம்பரம்-
Advertisement