புது மனப்பெண்கள் குறித்து கேவலமான வீடியோ மீம் – வீடியோ வெளியிட்டு சின்மயி கொடுத்த நச் விளக்கம்.

0
523
chinmayi
- Advertisement -

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது ஏற்படும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பாடகி சின்மயி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-
Chinmayi

அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
இவர் பாடகி மட்டுமில்லாமல் சிறந்த டப்பிங் கலைஞரும் ஆவார். இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

- Advertisement -

மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு தமிழகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் பிஸியாக பணியாற்றி வருகிறார். அதோடு இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாகவும், சைபர் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உடலுறவு கொள்வது குறித்து ஏற்படும் பிரச்சனைகளை வெளிப்படையாகச் சின்மயி பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சின்மயி வெளியிட்ட வீடியோ:

அதாவது, முதல்முறையாக ஆண் – பெண் உடலுறவில் ஈடுபடும் போது அந்த பெண்ணிற்கு இரத்தப்போக்கு இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பார்கள். அப்படி இரத்தப்போக்கு இல்லை என்றால் அவள் கன்னித்தன்மையோடு இல்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் பெண்களின் பெண்ணுறுப்பு மிகவும் டைட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை என்றாலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்.

-விளம்பரம்-

உடலுறவில் ஏற்படும் பிரச்சனை:

ஆனால், பெண்களில் சிலருக்கு மட்டுமே ரத்தப்போக்கு இருக்கும். பல பேருக்கு இந்த மாதிரி ஒரு மாற்றம் ஏற்படாது. அதேபோல் சில பெண்களுக்கு திரவம் சுரக்கும் தன்மை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு வெர்ஜினா டைட்டாக இருக்காது. மேலும், பெண்களுக்கு முதன் முறையாக உடலுறவின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டால் அவர்களுடைய பிறப்புறுப்பு இறுக்கமாக உள்ளது என்று அர்த்தம். அவர்கள் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சையை பெற வேண்டும்.

மருத்துவர் அறிவுரை:

மக்கள் பாலியல் பற்றிய அறிவை பெற வேண்டுமே தவிர அதை ஆபாச படங்கள் இருந்து பெறக் கூடாது. அது தவறான எண்ணங்களை விதைக்கக்கூடியது. வயது வந்தோருக்கான படங்களில் காட்டப்படும் உடலுறவுக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள விட்டால் தம்பதிகளுக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்படும். ஆபாச படங்கள் மீதான போதை ஒரு முக்கியமான பிரச்சனை. எனவே இதற்கான புரிதல்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement