ஜிப்ப கழட்டுங்களேன் – லைவில் மோசமாக கமன்ட் செய்தவருக்கு சின்மயி கொடுத்த பதிலடி.

0
8524
chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-
chinmayi

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : முதல்வரின் அதிரடி திட்டம் – அன்றே கணித்த அஜித். ட்ரெண்டாகும் ஹேஷ் டேக். தற்போது வைரலாகும் பாடல்.

- Advertisement -

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போல சின்மயிக்கு பலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் வருகின்றனர்.

ஆனால், மற்றவர்களை போல அல்லாமல் தனக்கு ஆபாச மெசேஜ் செய்யும் நபர்களுக்கு தக்க பாடம் கத்துக்கொடுத்துவிடுகிறார் சின்மயி. அந்த வகையில் சமீபத்தில் லைவ் வந்த போது ஒருவர், உங்க ஜிப்ப கழட்டுங்க என்று மோசமாக கமன்ட் செய்தார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள சின்மயி, மேலும் சில ஆண்கள் வெளிப்படையாக இது போல் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் போது பெண்களை பெண்ணியம் என்று குற்றம் சாட்டுகின்றனர். எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்கள் இது போன்ற ஆட்களால் என்ன ஆவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement