விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும்.

அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.

இதையும் பாருங்க : வருமான வரித்துறையின் அடுத்த டார்கெட் – விவசாயிகள் பிரச்சனை குறித்து ட்வீட் செய்த ஆண்ட்ரியா. அலர்ட் செய்யும் நெட்டிசன்கள்.

Advertisement

ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த காட்சி குறித்து பிரபல பின்னணி பாடகியான சின்மயி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், இயக்குனர் இந்த காட்சியை எழுதியுள்ளார் என்பது மகிழ்ச்சி. இனி பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தவர் குற்றம் சாட்டப்படமாட்டார். இருந்தாலும் நாம் வைரமுத்து, ராதாரவி போன்றவர்களை பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் நடித்த சிவகாசி படத்தின் ஒரு கட்சியில் அசின் அரைகுறை ஆடை அணிந்து வர அவருக்கு நடிகர் விஜய், இப்படி புருஷன் மட்டும் பார்க்கும் உடலை ஊர்க்கெல்லாம் காட்டினால் எல்லாரும் குடும்பம் நடத்த ஆசைப்படுவான் என்று பேசிய வசனத்தை வைத்து நடிகர் விஜய் ஆடையை விமர்சனம் செய்து பெண்களுக்கு எதிராக பேசினார் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் இந்த வீடியோ அமைந்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.

Advertisement
Advertisement