வருமான வரித்துறையின் அடுத்த டார்கெட் – விவசாயிகள் பிரச்சனை குறித்து ட்வீட் செய்த ஆண்ட்ரியா. அலர்ட் செய்யும் நெட்டிசன்கள்.

0
909
andrea
- Advertisement -

விவசாயிகளின் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் பதிவிட்ட கருத்து குறித்து நடிகை மாளவிகா மோகனும் ட்வீட் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

-விளம்பரம்-

விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே போல விவசாயிகள் போராட்டத்தில் சில கலவரவாதிகள் புகுந்ததால் தான் போராட்டம் கலவரலாமாக காரணம் என்றும் விவசாயிகள் சிலர் கூறி இருந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அட கொடுமையே, இங்க போய்ட்டு வந்ததால தான் சூர்யாவுக்கு கொரோனா வந்துச்சா ? புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரபல சர்வதேச பாடகியான ரிஹானா, சர்வதேச ஆபாச நடிகை மியா கலீபா என்று பலர் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர்.இந்த நிலையில், ரிஹானா, மியா கலீபா க்ரேட்டா தன்பெர்க் பதிவுகளுக்கு எதிராக பாலிவுட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்களான சச்சின், ரோஹித் சர்மா ஆகியோர் போட்ட பதிவு விவசாயிகளுக்கு எதிராக இருந்தது என்று பலர் கண்டங்களை எழுப்பினர்.

இப்படி ஒரு நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து சொன்ன பிரபலங்கள் குறித்து ஆண்ட்ரியா தனது பங்கிற்கு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் கவுஹர் கான் என்ற ட்விட்டர் வாசி ஒருவர், கறுப்பினத்தவர் வாழ்வது அவசியம் (Blacklivesmatter) ஆனால், அது இந்தியர்கள் பிரச்சனை கிடையாதே ? ஆனால், ஒவ்வொரு இந்தியரும் அதற்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். ஏனென்றால் அனைவரும் வாழ்வது என்பது அவசியம் தான். ஆனால், இந்திய விவசாயிகள் ? அவர்களின் வாழ்வாதாரம் அவசியம் இல்லையா ? என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த டீவீட்டுக்கு நடிகை ஆண்ட்ரியா, #Truestory என்று பதில் ட்வீட் செய்துள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த டீவீட்டை பார்த்த சிலர் வருமான வரித்துறை சோதனைக்கு ரெடியா இருங்க என்றும், நீங்கள் இனிமேல் இந்தியர் கிடையாது. மூட்டை மூட்டையாக பதில்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என்றும் ஆண்ட்ரியாவை அலர்ட் செய்து வருகின்றனர்.

Advertisement