ஒரு ஆம்பள காசு வாங்கிதான அப்படி நடிக்கிறான், மூ*** போ - ஆபாசமாக பேசிய பெண்ணுக்கு ஆதரவாக சின்மயி போட்ட பதிவு.
பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்து உள்ளனர். யூடுயூபில் Chennai Talk என்ற சேனலில் கடந்த சில வாரங்களுக்கு முன் 2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் கேமராமேன், சேனல் உரிமையாளர் என்று மூன்று பேரை கைது செய்தனர்.
https://www.youtube.com/watch?v=8-wqRqKEtyY&feature=emb_title
இப்படி ஒரு நிலையில் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார் அதில் பேசியுள்ள அவர் தான் ஒரு கின்னஸ் சாதனை செய்த ஒரு பெண் என்றும் தனக்கு எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியும் என்றும் என்னை அவர்கள் அணுகி என்ன பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதற்காக அவர்கள் 1500 ரூபாய் பணத்தையும் கொடுத்தார்கள் என்னை மட்டுமல்ல இப்படி பல பெண்களை அவர்கள் பணம் கொடுத்துதான் பேச வைத்து இருக்கிறார்கள். நான் புகார் கொடுத்ததற்கு முக்கிய காரணமே அந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செக்ஸ்சினை ஆப் செய்ய சொன்னேன். அவன் ஆப் செய்வதாக கூறிவிட்டு அப்படி செய்யவில்லை.
இதையும் பாருங்க : ஆரி கன்னத்தில் முத்தமிட்ட சனம்- நேற்றய நிகழ்ச்சியின் Unseen வீடியோ இதோ.
இதனால் கமெண்டில் பலரும் என்னை திட்டியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பெற்றோர்களையும் திட்டினார்கள். என்னால் வெளியில் கூட செல்ல முடியவில்லை.எங்கே சென்றாலும் இந்த பெண் தானே அது இவனெல்லாம் ஒரு பெண்ணா என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கொஞ்ச நாட்கள் நான் வெளியில் வரவே இல்லை. நான் மற்றவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் பேசவில்லை. நான் மெஹந்தி போடுவதில் கின்னஸ் சாதனை செய்த பெண் மேலும், நான் ஒரு 33 குழந்தைகளை வளர்த்து வருகிறேன். அவர்களுக்கு ஒரு பிஸ்கெட் வாங்கவாவது இந்த காசு உதவும் என்று நினைத்தேன். இதுவே ஒரு ஆண் பேசியிருந்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள்.
https://twitter.com/avinash96765255/status/1349474387368374275
இந்த பெண் ஏன் இப்படி பேசுகிறது என்று கேட்கிறார்கள். ஆனால், நான் இவ்வளவு தைரியமாக பேசி இருக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை. என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் பலரும் எப்படி 'நீ இவ்வளவு தைரியமாக பேசி இருக்கிறார்' என்றுதான் சொன்னார்கள். இருப்பினும் நான் பேசியது தவறுதான் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த பெண்ணை பேட்டியில் கேள்வி கேட்டவரை சின்மயி விமர்சித்து உள்ளார். அதில், பேட்டி என்ற பெயரில், அந்த பெண்ணை கொடுமை செய்துள்ளதை பார்க்கையில் அருவருப்பாக இருக்கிறது.
https://twitter.com/Chinmayi/status/1349741273880510466
இதை வைத்து அவர்கள் நன்றாக பணம் சம்பாதித்து இருப்பார்கள், கண்டிப்பாக சப்ஸ்கிரைபர் கூட அதிகமாகி இருப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், காசுக்காக கேவலமா பேசும்போது அருவருப்பா தெரியலையா என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த சின்மயி, ஏன் டா, ஒரு ஆம்பள ரேப்பிஸ்ட்டா நடிக்கும் போது காசுக்காக தான நடிக்கிறான். அவனை கேக்க வக்கு இல்ல. மூடிட்டு போ என்று பதில் அளித்துள்ளார்.