குழந்தைக்காக மோதி கொள்ளும் சேது-தமிழ், பஞ்சாயத்தில் கொடுத்த தீர்ப்பு - சின்ன மருமகள்
குழந்தைக்காக மோதி கொள்ளும் சேது-தமிழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, குழந்தை காணவில்லை என்றவுடன் பதறி விட்டார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அப்போது கருப்பு, குழந்தை எங்கும் போகவில்லை. கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறது என்று சொன்னார். பின் மொத்த குடும்பமுமே கெஸ்ட் ஹவுஸ் போனார்கள். குழந்தையை பார்த்தவுடன் சேது எமோஷனலாக அழுதார். பின் குழந்தையை தன் கையில் தூக்கி கொஞ்சினார். இதை பார்த்து ராஜாங்கம், கருப்பு எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
தமிழ்ச்செல்வி, தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு கோவிலில் பஞ்சாயத்து மணியை அடித்தார். வீட்டில் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது ஊர் தலைவர்கள் எல்லோருமே வந்துவிட்டார்கள். தமிழ்செல்வி, எனக்கு விவாகரத்து வாங்கித் தந்ததே நீங்கள் தான். என்னுடைய குழந்தைகள் தான் வாழ்க்கை என்று என்னுடைய மனதை ஏற்றுக் கொண்டேன். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால், எனக்கு பிறந்த முதல் குழந்தையான ஆண் குழந்தையை எனக்கு தெரியாமலேயே அப்பத்தா பெரிய வீட்டில் கொடுத்து விட்டார்கள்.
சின்ன மருமகள்:
எனக்கு என்னுடைய குழந்தையை வேண்டும். நியாயம் கேட்டு தான் இந்த மணியை அடித்து இருக்கிறேன் என்றார். ஊர் தலைவர்கள் ராஜாங்கம் வீட்டிற்கு சென்று தமிழ் செல்வி கொடுத்திருக்கும் புகாரை பற்றி சொன்னார்கள். இதை கேட்டு ராஜாங்கம், சேது பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் பஞ்சாயத்து நடக்கிறது. தமிழ்செல்வி தன் தரப்பில் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். சேது, என் மகனை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன் என்றார். காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, எனக்கு என்னுடைய இரண்டு குழந்தைகளும் வேண்டும். என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது என்று சண்டை போடுகிறார். சேதுவும் தன் தரப்பிற்கு தன்னுடைய மகன் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். பின் பஞ்சாயத்தில் தலைவர்கள், தீர்ப்பை குழந்தைகளிடமே விடுகிறார்கள். சீட்டில் இரண்டு குழந்தைகளும் அம்மாவிடம் வேண்டுமா? இல்லை ஒரு குழந்தை அப்பாவிடம் வேண்டுமா? என்று எழுதி போடுகிறார்கள். அதில் அம்மாவிடம் ஒரு குழந்தை, அப்பாவிடம் ஒரு குழந்தை என்று தீர்ப்பு வருகிறது. ஆனால், தமிழ் செல்வி அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
சீரியல் ட்ராக்:
சேது, நான் என்னுடைய அம்மா தான் மகளாக பிறப்பதாக கனவில் சொல்லுவார். என் மகளை பார்க்க வேண்டும். அவருக்கு என்னுடைய பாசம் வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். பஞ்சாயத்தில், வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்குமே உங்கள் இருவரின் பாசம் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். சேது ஒத்துக்கொள்கிறார். ஆனால், தமிழ் செல்விக்கு விருப்பமில்லை. இருந்தாலும் எதுவும் பேசாமல் தன்னுடைய மகளை எடுத்துக்கொண்டு செல்கிறார். இதற்கெல்லாம் காரணம் அப்பத்தா என்பதால் தமிழ் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் சேது தன்னுடைய மகன் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்