Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Tamil 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.09.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அப்பத்தாவை வெளுத்து வாங்கிய சேது, ஸ்கேன் ரிப்போர்ட் ரகசியத்தை அறிந்தாரா தமிழ்? சின்ன மருமகள்

எழுதியவர்subhashini4 செப்டம்பர், 2025 அன்று 06:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரியின் மகன் போஸ் வீட்டிற்கு வந்திருந்தார். இதை அறிந்த தமிழ், எதற்காக உங்கள் மகன் வீட்டுக்கு வந்தான்? ஒழுங்கு மரியாதையாக வெளியே போக சொல்லுங்கள் என்றார். அதற்கு ஈஸ்வரி, அப்பத்தா இறந்தது நினைத்து தான் அவன் வந்தான். அதுக்காக அவன் எப்போதுமே வெளியே இருக்க முடியாது என்றார். தமிழ், உங்கள் மகன் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் அவன் மாமாவை கொலை செய்ய முயற்சித்த விஷயத்தை சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருந்தார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அமைதியானார்.

அப்பத்தாவை வெளுத்து வாங்கிய சேது, ஸ்கேன் ரிப்போர்ட் ரகசியத்தை அறிந்தாரா தமிழ்? சின்ன மருமகள்

பின் போஸ்ஸிடம் ஈஸ்வரி, நீ இங்கிருந்து கிளம்பு. இந்த தமிழின் ஆட்டத்தை அடக்கி விட்டு உன்னை கூப்பிடுகிறேன் என்றார். அதற்குப்பின் சேது வீராப்பிற்காக தமிழ்ச்செல்வியை வெறிப்பேற்ற சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதனால் ஜீரணம் ஆகாமல் சேது வாமிட் செய்தார். இதையெல்லாம் பார்த்த தமிழ் அவருக்கு நாட்டு வைத்தியம் செய்தார். அதற்குப் பிறகு சேது உடல்நிலை சரியாகிறது. பின் சேது, எதற்காக இதை செய்தாய் என்று கேட்டார். அதற்கு தமிழ், இருவரும் ரூமேட் என்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

ஈஸ்வரி தன்னுடைய மகனை எப்படியாவது அங்கேயே தங்க வைக்க பேசினார். அப்போது ராஜாங்கம், இந்த முடிவு நான் எடுக்க முடியாது மலர் தான் எடுக்கணும் என்றார். உடனே மலர், என்னால் போஸுடன் இனி சேர்ந்து வாழ முடியாது. தயவு செய்து எங்கள் இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, மலரை திட்டினார். பின் மலர் -போஸ் இருவரையுமே ராஜாங்கம் பிரித்து விட்டார். மலர் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி போஸிடம் கொடுத்து விட்டார். அதோடு போஸ் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றார் ராஜாங்கம். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

அப்பத்தாவை வெளுத்து வாங்கிய சேது, ஸ்கேன் ரிப்போர்ட் ரகசியத்தை அறிந்தாரா தமிழ்? சின்ன மருமகள்

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும். நீங்கள் வருவீர்களா? என்று கேட்க, கோபத்தில் சேது திட்டி விட்டு போனார். இதனால் தமிழ்செல்வி ரொம்பவே மனமடைந்து விட்டார். இன்னொரு பக்கம் மலரை பார்த்து தாமரையின் அம்மா, நீ இனிமேல் இந்த வீட்டு மருமகள் கிடையாது. வேலைக்காரி தான். அதற்கான உடைகளை போடு என்று திட்டினார். உடனே ராஜாங்கம், நீ எப்போதும் இந்த வீட்டு மருமகள் தான் என்று மலருக்கு சப்போர்ட் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி அம்மா, அப்பத்தாவிடம் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை பற்றி சொன்னார்.

அப்பத்தாவை வெளுத்து வாங்கிய சேது, ஸ்கேன் ரிப்போர்ட் ரகசியத்தை அறிந்தாரா தமிழ்? சின்ன மருமகள்

சீரியல் ட்ராக்:

பின் அப்பத்தா ஹாஸ்பிடல் செல்லும் விஷயத்தை அறிந்த தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே திட்டினார்கள். இருந்தாலும் அப்பத்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஹாஸ்பிடலில் தமிழ்ச்செல்வியை செக் பண்ண டாக்டர், இரட்டை குழந்தை என்று சொன்னார். இதை கேட்டு தமிழ் செல்வின் அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அப்போது அப்பத்தா, இந்த விஷயத்தை தமிழ்செல்வி இடம் சொல்ல வேண்டாம். என் பேரன் பேதியை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்த விஷயம் தமிழ் செல்விக்கு தெரியவில்லை.

அப்பத்தாவை வெளுத்து வாங்கிய சேது, ஸ்கேன் ரிப்போர்ட் ரகசியத்தை அறிந்தாரா தமிழ்? சின்ன மருமகள்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் இரட்டை குழந்தை விஷயத்தை தமிழிடம் இருந்து அவர் அம்மா மறைத்து விடுகிறார். ஆனால், தமிழுக்கு அப்பத்தா மீது சந்தேகப்படுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, ஹாஸ்பிடலில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். ஆனால், இரட்டை குழந்தை விஷயத்தை சொல்லவில்லை. இதை எல்லாம் கேட்ட சேது கடுப்பாகி அப்பத்தாவை திட்டிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய அம்மாவிடம் ஏதாவது என்னிடம் மறைக்கிறீர்களா? என்ன பிரச்சினை என்று கேட்கிறார். ஆனால், தமிழ்செல்வியின் அம்மா ஏதேதோ சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் வெளியே வரும்போது தரை வழுக்கியதால் சேது, தமிழ்செல்விக்கு அடிபட்டு விடுமோ என்று பயந்து ஒரு பேப்பரில் கவனமாக செல்லவும் என்று எழுதி வைத்துவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

தலைப்புகள்
#Chinna Marumagal latest episode#Chinna Marumagal Serial#சின்ன மருமகள்#சின்ன மருமகள் லேட்டஸ்ட்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement