விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, நமக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார். இதைக் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து போஸ்-காவியா திருமணம் மூன்று நாட்களில் நடக்க இருக்கிறது. எல்லோருமே திருமண வேலையில் இருந்தார்கள். அதற்குப்பின் போஸ் அக்கா, மலரை வெறுப்பேற்றுவதற்காக போஸ் திருமணத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

இதை கேட்ட மலர், என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவரை பற்றி எனக்கு கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன். நான் மேற்கொண்டு படித்து வக்கீல் ஆகப் போகிறேன் என்றார். இதை கேட்டு தமிழ் செல்வி கைதட்ட, போஸ் அக்காவிற்கு பயங்கர கடுப்பானது. தமிழ்ச்செல்வி, நீங்கள் எடுத்தது சரியான முடிவு என்றார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் வேலை முடித்துவிட்டு வருவதற்குள் பஸ் மிஸ் ஆகி விடுவதால் கல்லூரிக்கு நடந்து போனார். இதை பார்த்த சேது, தமிழ்செல்வியை தன்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றார்.
சின்ன மருமகள் சீரியல்:
எம்எல்ஏ, திருமணத்திற்கு முன்பு போஸுக்கு கார் வாங்கி தர இருப்பதால் ராஜாங்கம் வீட்டிற்கு வந்து மாடல்களை எல்லாம் காண்பித்து இருந்தார். அப்போது போஸ், 50 லட்சம் மதிப்புள்ள கார் தான் வேண்டும் என்றார். இதை கேட்டு தாமரை- சாவித்திரி வாய் அடைத்துப் போனார்கள். ஈஸ்வரிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பின் கல்லூரியில் தமிழ்ச்செல்வி முதல் மதிப்பெண் எடுத்ததால் எம்எல்ஏ ஸ்காலர்ஷிப் தர ஒத்துக்கொண்ட விஷயத்தை கல்லூரி ஆசிரியர் சொன்னார். இதைக் கேட்டு தமிழ் செல்விக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேது, ரேடியோவை சரி செய்து பாட்டு கேட்டு கொண்டிருந்தார். அதில் வரும் குழந்தை சம்மந்தப்பட்ட பாடலை கேட்டு பழைய விஷயத்தை சேது நினைத்துப் பார்த்தார். அப்போது தமிழ்ச்செல்வி, படித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிவதால் மலர், தனத்திடம் அழைத்துக் காண்பித்தார். இதை பார்த்த சேதுவிற்குமே குழந்தையின் அசைவை பார்க்க ஆசைப்பட்டார். பின் தமிழ் துங்கிய பிறகு சேது, தமிழ்ச்செல்வியின் வயிற்றில் கை வைத்து பார்த்தார். குழந்தை அசைவை உணர்ந்தவுடன் சேது தன்னை அறியாமல் அழுதார். பின் வயிற்றில் காது வைத்து கேட்டு ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் தமிழ்ச்செல்வி பார்த்தார்.
https://www.youtube.com/watch?v=FwSYlpzohUM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் சேது, போஸ், கருப்பன் எல்லோரும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவியா போன் செய்த உடனே போஸ் பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடுகிறார். பின் இதைப் பற்றி சேது, தனத்திடம் சொல்லி போஸ் பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என்று கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட தமிழ், ஒரு காலத்தில் நீங்களும் அப்படித்தான் இருந்தீர்கள் என்று சொல்கிறார். அப்போது சேது, நான் பொண்டாட்டி தாசன் ஆக இருக்க பெருமைப்படுகிறேன் என்று டீ சர்ட்டை போட்டு தமிழ்செல்வி இடம் காட்டியதெல்லாம் நினைத்து பார்க்கிறார்கள்






