தமிழ்செல்வி மீது சந்தேகப்படும் அப்பத்தா, கோபத்தில் சேது சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 3/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தாவிடம் தாமரை அம்மா, ஈஸ்வரி இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது அப்பத்தா, நான் உங்களுக்கு பணம், நகை தருகிறேன் என்று சொன்னேனா? என்று இருவரையுமே வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது- ராஜாங்கம் இருவருமே பேசினார்கள். அப்போது ராஜாங்கம், நீ குடும்ப ஒற்றுமைக்காக தான் இப்படி எல்லாம் செய்தாய் அம்மா. நீ செய்ததை நினைத்து எனக்கு வருத்தம் இல்லை என்றார். சேதுவுமே தன்னுடைய பாட்டியிடம் ரொம்ப எமோஷனலாக பேசினார்.

ஈஸ்வரியின் மகன் போஸ் வீட்டிற்கு வந்திருந்தார். இதை அறிந்த தமிழ், எதற்காக உங்கள் மகன் வீட்டுக்கு வந்தான்? ஒழுங்கு மரியாதையாக வெளியே போக சொல்லுங்கள் என்றார். அதற்கு ஈஸ்வரி, அப்பத்தா இறந்தது நினைத்து தான் அவன் வந்தான். அதுக்காக அவன் எப்போதுமே வெளியே இருக்க முடியாது என்றார். தமிழ், உங்கள் மகன் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் அவன் மாமாவை கொலை செய்ய முயற்சித்த விஷயத்தை சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருந்தார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அமைதியானார்.

சின்ன மருமகள் சீரியல்:

பின் போஸ்ஸிடம் ஈஸ்வரி, நீ இங்கிருந்து கிளம்பு. இந்த தமிழின் ஆட்டத்தை அடக்கி விட்டு உன்னை கூப்பிடுகிறேன் என்றார். அதற்குப்பின் சேது வீராப்பிற்காக தமிழ்ச்செல்வியை வெறிப்பேற்ற சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதனால் ஜீரணம் ஆகாமல் சேது வாமிட் செய்தார். இதையெல்லாம் பார்த்த தமிழ் அவருக்கு நாட்டு வைத்தியம் செய்தார். அதற்குப் பிறகு சேது உடல்நிலை சரியாகிறது. பின் சேது, எதற்காக இதை செய்தாய் என்று கேட்டார். அதற்கு தமிழ், இருவரும் ரூமேட் என்றார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி தன்னுடைய மகனை எப்படியாவது அங்கேயே தங்க வைக்க பேசினார். அப்போது ராஜாங்கம், இந்த முடிவு நான் எடுக்க முடியாது மலர் தான் எடுக்கணும் என்றார். உடனே மலர், என்னால் போஸுடன் இனி சேர்ந்து வாழ முடியாது. தயவு செய்து எங்கள் இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, மலரை திட்டினார். பின் மலர் -போஸ் இருவரையுமே ராஜாங்கம் பிரித்து விட்டார். மலர் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி போஸிடம் கொடுத்து விட்டார். அதோடு போஸ் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றார் ராஜாங்கம். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, ஸ்கேன் ஹாஸ்பிடல் போகணும். நீங்கள் வருவீர்களா? என்று கேட்கிறார். கோபத்தில் சேது, நான் எதற்காக வரணும். என்னை நம்ப வைத்து ஏமாற்றியது போதும். அதோடு எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தமில்லை என்று திட்டி விட்டு செல்கிறார். இதனால் தமிழ்செல்வி ரொம்பவே மனமடைந்து விடுகிறார். இன்னொரு பக்கம் மலரை பார்த்து தாமரையின் அம்மா, நீ இனிமேல் இந்த வீட்டு மருமகள் கிடையாது. வேலைக்காரி தான். அதற்கான உடைகளை போடு என்று திட்டுவதால் மலர் வேலைக்காரி துணியை அணிந்து கொள்கிறார். இதை பார்த்த ராஜாங்கம், நீ எப்போதும் இந்த வீட்டு மருமகள் தான் என்று மலருக்கு சப்போர்ட் செய்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி அம்மா, அப்பத்தாவிடம் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்பத்தா, சந்தோசப்பட்டாலும் இந்த முறை உண்மையாகவே தமிழ் செல்வி கர்ப்பமாக இருக்கிறாரா? என்பதை ஹாஸ்பிடல் போய் தெரிந்து கொள்ளலாம் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். பின் அப்பத்தா ஹாஸ்பிடல் செல்லும் விஷயத்தை அறிந்த தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே திட்டுகிறார்கள். இருந்தாலும் அப்பத்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஹாஸ்பிடலில் தமிழ்ச்செல்வியை செக் பண்ண டாக்டர், இரட்டை குழந்தை என்று சொல்கிறார். இதை கேட்டு தமிழ் செல்வின் அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அப்போது அப்பத்தா, இந்த விஷயத்தை தமிழ்செல்வி இடம் சொல்ல வேண்டாம். என் பேரன் பேதியை சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார். இந்த விஷயம் தமிழ் செல்விக்கு தெரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full