விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ், இந்த மருந்தை தமிழ்ச்செல்வி தான் எடுத்து வந்தார். ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளை அடித்துவிட்டு மருந்தை கொண்டு வந்தேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கண்விழித்தார். அப்போது சேது, நான் சொன்னாலும் நீ கேட்கவில்லை. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய் என்றார். தமிழ் செல்விக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.

ஈஸ்வரி, போஸ் தான் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றினான். அவனுக்குதான் நாம் எல்லோரும் நன்றி கடன் பட்டிருக்கோம் என்றெல்லாம் சொன்னார். உடனே ராஜாங்கம், போஸை மன்னித்து விட்டு வீட்டிலேயே தங்க சொன்னார். இன்னொரு பக்கம் தமிழுக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதால் அவர் தங்கை ஒத்தடம் கொடுத்தார். அப்போது தமிழின் தலையில் அடிபட்டு இருப்பதை அவருடைய தங்கை பார்த்து விசாரித்தார். தமிழ், நான் மருந்து எடுத்துட்டு வரும்போது யாரோ என்னை தலையில் அடித்தது போல இருக்கிறது. அப்போதுதான் நான் மயங்கி விழுந்தேன் என்றார்.
சின்ன மருமகள்:
சேது, என் குடும்பத்தில் உள்ள பாதிப்பேர் உன் மீது கோபத்தை காண்பித்தாலும் நீ மருந்து எடுக்க வந்தது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்றார். அதற்கு தமிழ்செல்வி, இப்போது நமக்குள் வெறுப்பு கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு நாம் இருவரும் பாசம் வைத்து இருந்தோம். அது என்றும் மாறாது. நான் மருத்துவர். எல்லோருக்குமே உதவி செய்வது தான் என்னுடைய தொழில் என்று சொன்னார். இன்னொரு பக்கம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் ராஜாங்கத்திடம் நலம் விசாரித்தார்.

சீரியல் ட்ராக்:
பின் அவர், தன்னுடைய மகள் திருமணமாகி கொஞ்ச நாளிலே விவாகரத்து வாங்கி வீட்டில் இருந்தார். அந்த மாதிரி இருக்கும் நபர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, தன் மகனை எப்படியாவது கோடிக்கணக்கில் சொத்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசித்தார். பின் இதைப் பற்றி போஸ் இடம் ஈஸ்வரி சொன்னார். போசுமே சம்மதித்தார். ஈஸ்வரி, நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீ பல கோடி சொத்துக்கு அதிபதியாக போகிறாய் என்றெல்லாம் சந்தோஷப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=zE44hspBTtk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் பிரோமோவில் தமிழ்செல்வியின் பிறந்த நாளை அப்பத்தா, கேக் வாங்கி வந்து வீட்டில் சிறப்பாக கொண்டாடுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி கோபப்பட்டு கேக்கை தூக்கி எறிந்து தமிழ் செல்வியை திட்டுகிறார். ஆனால், சேது எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது தமிழ்செல்வியின் தங்கை, அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என்கிறார். அதற்கு சேது, எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.






