ரவீனா 'உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு'னு சொன்னார், ஆனால் - செயலாளர் நவீந்தர் எக்ஸ்குளூசிவ்

By subhashini · 13/8/2025

தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். இந்த சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவியில் இருக்கும் சிவன் சீனிவாசன் மீண்டும் போட்டியிட்டார். அவரை தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிட்டு இருந்தார்கள். நடிகை ஆர்த்தி கணேஷ் மட்டும் சுயேச்சையாக தலைவர் பதவிக்கும் அவருடைய கணவர் கணேஷ் அவர்கள் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு இருந்தார்கள்.
இதில் தினேஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ரவீனா போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.

மேலும், சில தினங்களுக்கு முன் சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றிருந்தது.
இதில் பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் வாக்களித்து இருந்தார்கள். ஆனால், நடிகை ரவீனாவை மட்டும் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் வேதனையில் நடிகை ரவீனா பேட்டி அளித்து இருந்தார். பின் வாக்கு பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தலைவர் பதிவுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில் நடிகர் பரத் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முன்னிலையில் வகுத்து வந்தார். இவர் 491 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

சின்னத்திரை தேர்தல்:

அவரை அடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவன் சீனிவாசன் 222 வாக்குகளும், தினேஷ் 175 வாக்குகளும், ஆர்த்தி 33 வாக்குகளும் பெற்றார்கள். இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவர் ஆனது பரத் தான். அதற்குப்பின் செயலாளர் பதவிக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நடிகர் நவீந்தர் 471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், பரத் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என அனைத்து பேருமே வெற்றி அணியை சேர்ந்தவர்கள் தான்.

https://www.youtube.com/watch?v=ALUy8eWpaRc

நவீந்தர் பேட்டி:

இந்நிலையில் சங்கத்தின் புதிய செயல்பாடுகள், திட்டங்கள் தொடர்பாக வெற்றி அணியின் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர் நவீந்தர் அளித்த பேட்டியில், அபார வெற்றி எங்களுடைய அணிக்கு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரே அணியை சேர்ந்த நபர்கள் வெற்றி பெற்றிருப்பது இதுதான் முதல் முறை. அதேபோல் இதுவரைக்கும் பொருளாளர் பதவியில் ஒரு பெண் இருந்ததே கிடையாது. இப்போது கற்பகவல்லி அக்கா வந்திருக்கிறார். பொறுப்புக்கு வந்ததுமே எங்களுடைய அணி சில விஷயங்களை நடைமுறைப்படுத்தணும் என்று சில குறிக்கோள்கள் வைத்திருக்கிறோம். எங்களுடைய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாமல் நிறைய பேரு நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்று ஒரு கட்டாயம் கொண்டுவரப் போகிறோம்.

https://www.youtube.com/watch?v=VGs6s1e0AqI

புதிய திட்டங்கள்:

தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்களை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினாலும் அதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால், முதல் வேலையாக அவர்களையும் சங்கத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும். சங்கத்தில் இருக்கிற நடிகர்கள் பலருமே வேலையில்லாமல் இருக்கிறார்கள். முதன்மை கதாபாத்திரங்களை தாண்டி சீரியலில் பல துணை கதாபாத்திரங்களும் வரும். அதில் உறுப்பினர்களை நடிக்க வைக்கலாம். இதை செய்வதற்கு சேனலும் தயாரிப்பு நிறுவனமும் தயாராக தான் இருக்கிறார்கள். அப்படியான ஆதரவை நாங்கள் நிச்சயமாக கொடுப்போம். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு இனி மாதம் தோறும் உரிமை தொகை கொடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். இப்படி பல விஷயங்களை தாண்டி கல்வி, மருத்துவம் என உறுப்பினராக இருக்கும் நடிகர்களின் குடும்பத்திற்கு பல வசதிகளை செய்து தரவும் திட்டமிட்டு இருக்கிறோம். ரவீனா ரெட் கார்டு விவகாரம் கடந்த நிர்வாகத்தில் நடந்த விஷயம். அதற்கும் இந்த நிர்வாகத்திற்கும் தொடர்பு கிடையாது.

ரவீனா பற்றி சொன்னது:

அவங்க நடிக்கக் கூடாது, தேர்தலில் நிற்க கூடாதுன்னு ரெக்கார்டு கொடுத்தது கடந்த நிர்வாகத்தில் நடந்த விஷயம். அப்போது நடந்த தவறுக்கு இந்த நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? இதற்கு பிறகு தான் நாங்கள் தலையிட்டு என்ன பிரச்சனை நடந்திருக்கிறது? எதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது? எதனால் தேர்தலில் நிற்பதற்கும், ஓட்டு போடுவதற்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது? என்றெல்லாம் பார்க்கப் போகிறோம். மற்றபடி எங்க நிர்வாகத்திற்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ரவீனா தங்கை எனக்கு முன்னாடி இருந்தே பழக்கம். தேர்தல் நேரத்தில் தங்கை என்னிடம், உன்னை பார்த்த பாவமாய் இருக்கு என்று சொன்னார். ஏன் தங்கச்சி அப்படி சொன்னாங்கன்னு தெரியவில்லை. இனி தான் என்ன விஷயம் நடந்தது என்று நான் விசாரிக்கணும் என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full