பாலிவுட் போல தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். இருப்பினும் பல நடிகர் தங்கள் வாரிசுகளை சினிமா துறையில் வரவிடமால் இருந்தாலும் நடிகர்களின் மகன்கள் உயர் பதிவிக்கு வருவது மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்த வகையில் தமிழில் பல்வேரு படங்களின் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்த நடிகர் சின்னி ஜெயந்த் தனது மகனை சினிமா துறையில் கொண்டு வராமல் ஐ ஏ எஸ் ஆக்கி இருக்கிறார்.

ஜெயந்துக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சித்தார்த் ஜெயநாத், ஸ்ருதன் ஜெய்நாத் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சமீபத்தில் ஸ்ருதன், தமிழ் நாட்டில் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது துணை ஆட்சியராக பதவியேற்க இருக்கிறார். இவர் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சின்னி ஜெயந்த், மகனை சினிமா துறையில் வரவிடாமல் ஐஏஎஸ் தேர்வில் பங்குபெற வைத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

இதையும் பாருங்க : பாத் டப்பில் பிரசவம் பார்த்த நகுல் மனைவி – பிரசவத்தின் போது எடுத்த வீடியோ இதோ.

Advertisement

ஒரு படத்தில் கமிட் ஆனதிலிருந்து அந்த படத்தின் ரிலீஸ் வரைக்கும் நாங்கள் எதிர்கொள்ளும் பென்ஷன் எங்களுக்குத்தான் தெரியும்.அந்த டென்ஷனை எங்கள் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதேபோல சினிமாவிற்குள் வர வேண்டும் என்கிற எண்ணம் என்னுடைய பிள்ளைகளுக்கும் இல்லை. ஸ்ருதன் ஐஏஎஸ் தேர்வில் தேர்வான தகவலை அறிந்து ரஜினி சார் கமல் சார் என்று பல்வேறு பிரபலங்கள் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்கள்.

நம்முடைய வெற்றி நம் குடும்பத்தையும் தாண்டி பலருக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற விஷயம் அரிதானது. அந்த பெருமையை ஸ்ருதன் எங்களுக்கு கொடுத்திருக்கிறான். சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் பிள்ளைகள் விளையாட்டு அல்லது அரசு உயர் பதவி என்று ஏதாவது ஒரு துறையில் பெரிய நபர்களாக உருவாக வேண்டும் என்று கூறியுள்ளார்

Advertisement
Advertisement