‘நான் கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதனால் தான்’ – திருமண நாளில் மேக்னா போட்ட உருக்கமான பதிவு.

0
694
Meghna
- Advertisement -

திருமண தினம் குறித்து மேக்னா ராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து இருந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்து இருந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் தான் மேக்னா சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

-விளம்பரம்-

இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். இதுவரை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 22 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சிரஞ்சீவி சர்ஜா மரணம்:

இப்படி இருக்கும் நிலையில் சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். மேலும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. அநியாயமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். இவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது. மேலும், இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்னா குழந்தை:

அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார்.
தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருந்தார்கள். மேலும், சர்ஜா பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது.

-விளம்பரம்-

மேக்னா குழந்தையின் பெயர்:

மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது. தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியில் மேக்னாராஜ் நடுவராக பங்கேற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தன் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் இவர் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

மேக்னா போட்ட பதிவு:

இந்நிலையில் மேக்னாராஜ் தன்னுடைய திருமண நாள் அன்று பதிவு ஒன்று போட்டு இருந்தார். அது என்னவென்றால், கடவுளை நான் மன்னிக்க ஒரே காரணம் ”ராயானுக்கு எனக்கும் அவர் சரியானதைச் செய்ய அவருக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை என்று எனக்குத் தெரியும் என்பதால் தான்” என்று போட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement