முடிவுக்கு வந்தது சித்தி 2 சீரியல் – கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபலங்கள் கொண்டாட்டம். இதோ புகைப்படம்.

0
712
chithi
- Advertisement -

சித்தி 2 சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. ஆனால், தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானதிலிருந்து சீரியல்கள் இருக்கிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் இல்லத்தரசிகள் விரும்பி பார்த்தது சன் டிவி சீரியல்கள் தான்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் பல சேனல்கள் உருவாகி இருந்தது. இருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களாக சன் டிவி இருக்கிறது. மேலும், டிஆர்பியிலும் முதலிடத்தில் சன் டிவி சீரியல்கள் விளங்கி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கான சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. அப்படி ஒளிபரப்பான தொடர்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று தான் சித்தி சீரியல்.

இதையும் பாருங்க : ‘திடீர் நெஞ்சு வலி, ரத்த கசிவு’ – தந்தையின் உடல் நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை.

- Advertisement -

சித்தி சீரியல்:

90 கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று சித்தி. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான். மேலும், பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் சன் டிவியில் ஒளிபரப்பானது. கடந்த ஜனவரி 27ம் தேதி 2020ம் ஆண்டு இந்த சித்தி 2 ஒளிபரப்பானது.

சித்தி 2 சீரியல்:

தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து இடையிலேயே ராதிகா சரத்குமார் வெளியேறியது அனைவருக்கும் தெரிந்ததே. ராதிகா சீரியலில் இல்லை என்றாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அதிலும் இந்த சீரியலில் கவின், வெண்பா உடைய ரொமான்ஸும் சோசியல் மீடியாவில் செம ஹிட் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

சித்தி 2 சீரியல் முடிவு:

அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சித்தி 2 சீரியல் முடிவடைய உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தற்போது சித்தி 2 சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

கடைசி நாள் சூட் புகைப்படம்:

கடைசி நாள் சூட்டிங்கின் போது சித்தி 2 சீரியலின் மொத்தகுழுவும் கேக் வெட்டி தங்களுடைய கடைசி நாளைக் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் சீரியல் முடிவடைகிறது என்று சோகத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement