சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ மைதானத்தில் நடைபெற்றிருக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊழியர்களாக பணிபுரிகிறார்கள். இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஜோக்கராக நடிப்பவர் தான் துளசி தாஸ் சவுத்ரி. இவர் பார்ப்பதற்கு 2 அடி தான் இருப்பார். ஆனால், இவருடைய ஜோக்கும், நடிப்பும் அட்டகாசமும் பிரமாதமாகவும் இருக்கும். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே சர்க்கஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த சர்க்கஸ் வேலையில் சேர்ந்தார். சர்க்கஸில் சேர்ந்த பிறகு புதிய உறவுகள், நண்பர்கள், பல ஊர் பயணம் என்று அதுவே அவருக்கு வாழ்க்கையாக மாறிவிட்டது.

12 வயதில் தொடங்கிய அவரது ஜோக்கர் பணி தற்போது 74 வயதாகியும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவர் 62 ஆண்டு காலமாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்க்க வரும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் உடன் நன்றாக பேசி பழகி இருக்கிறார் சௌத்திரி. இந்நிலையில் அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் நண்பராக பழகி இருக்கிறேன்.

Advertisement

என்னுடைய வாலிப பருவத்தில் இருக்கும் போது சில மாதங்கள் நான் பெங்களூரில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினோம். காலையில் எங்களுக்கு ஓய்வு நேரம். மதியம் தான் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கும். அதனால் ஓய்வு நேரத்தில் பெங்களூரில் சில இடங்களில் சுற்றி பார்க்க செல்வோம். அப்படி ஒரு நாள் சுற்றிப் பார்க்க பஸ்ஸில் பயணம் செய்த போது எனக்கு ரஜினி நண்பர் ஆனார். ரஜினி அந்த பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்து இருந்தார். பிறகு நானும் அவரும் உரையாடல் மூலம் நண்பர்கள் ஆனோம். நான் வருவதற்கு முன்னே எனக்காக சீட் ரிசர்வ் பண்ணி வைத்து இருப்பார். நல்ல தமாஷாக பேசுவார். நிறைய விஷயங்கள் நானும் அவரும் பகிர்ந்து கொள்வோம். அவர் தினமும் என்னிடம் சர்க்கஸ் அனுபவங்கள் குறித்து கேட்பார். பின் அவர் சினிமாத் துறையில் நடிகரான பிறகு அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement

அவர் படங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவருடன் பழகிய நினைவுகள் தான் ஞாபகம் வருகிறது. அவர் எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினராக வருவார் என்று ஒவ்வொரு வருஷமும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். 45 வருடங்களுக்கு மேலாகியும் என்னுடைய காத்திருப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதே தவிர அவர் இன்னும் வரவில்லை என்று கண்களில் ஏக்கத்துடன் ரஜினிகாந்த் வருகை காத்திருப்பை குறித்து கூறினார். இந்தப் பேட்டியின் மூலம் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய பழைய நண்பரை மீண்டும் சந்திப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement