பா ஜ கவினர் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்ச்சி – குழந்தைகள் போட்ட அடுத்த கெட்டப்பை பார்த்து நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்.

0
504
mk
- Advertisement -

சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். ஒவ்வொரு சேனலும் தன்னுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக புத்தம் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-

பெரும்பாலும் சேனல்களில் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சியை என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் குழந்தைகள் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். இது எல்லா சேனல்களிலும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் ஒளிபரப்பாகும் சேனல்களில் ஜீ தமிழ் மிகப்பிரபலமான சேனல். இந்த சேனலில் சீரியல் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குழந்தைகளுக்கான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

மோடியை விமர்சித்த சிறுவர்கள்:

இந்த நிகழ்ச்சியில் நடுவராக சினேகா, மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடுவராக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் புலிகேசி என்ற தலைப்பில் நடத்திய நாடகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு கண்டனத்தை பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி பாஜக கும்பல், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறையில் புகார் அளித்து தொலைக்காட்சிக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி:

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . இந்த நிலையில் தற்போது சிறுவர்கள் சமுதாய விழிப்புணர்வு குறித்து தந்தை பெரியார் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தை அரங்கேற்றி இருப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் கெட்டப்பில் சிறுவர்கள் நடித்து இருந்தார்கள். அப்போது பெரியார் கருத்தை, பெண்விடுதலை, பெரியார் கடவுளை ஏன் எதிர்த்தார்? மதத்தை தூக்கி எறிய சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சிறுவர்கள் நாடக வடிவில் பேசி மக்களின் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

சமுதாய விழிப்புணர்வு நாடகம்:

குறிப்பாக பெரியாரின் வேடமணிந்த சிறுவர், கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமாக நடத்துவது மட்டுமே தான் என்னுடைய எண்ணம் போன்ற வசனங்கள் எல்லாம் பேசி இருந்தார். அதேபோல் பெண்ணின் அடிமைத்தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளையும் பேசி இருந்தார்கள். இப்படி இந்த குழந்தைகள் பேசி இருக்கும் சமுதாய விழிப்புணர்வு கருத்து சோசியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சமூகநீதி காத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து நிகழ்ச்சி தயாரித்து இருந்தார்கள்.

சிறுவர்களுக்கு வாழ்த்து சொல்லிய முதல்வர்:

இந்த நிலையில் சமுதாய விழிப்புணர்வு குறித்த நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் எல்லோரையும் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது சிறுவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை மீண்டும் முதல்வர் முன்பு நடித்துக் காட்டி இருந்தார்கள். இதற்காக சிறுவர்களுக்கு திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் கையில் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், முதல்வரின் சந்திப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement