நள்ளிரவில் கதவை தட்டிய துணை நடிகர். குடும்பத்துடன் இணைந்து கொலை செய்த துணை நடிகை.

By Rajkumar · 30/12/2019

மதுரையிலிருந்து சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சென்னைக்கு வந்த ரவியை துணை நடிகை தேவி மற்றும் குடும்பத்தினர் கொலை செய்து உள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு கொரட்டூரில் குடும்பத்தோடு வசித்து இருந்தவர் தேவி. இவர் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். அப்போது தான் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வந்துள்ள ரவிக்கும் தேவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி,தேவியிடம் உன்னை பெரிய நடிகையாகி விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், இயக்குனராகும் கனவில் இருக்கும் ரவிக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பின் தேவியுடன் இணைந்து சில படங்களில் துணை நடிகராக ரவி நடித்துள்ளார். பின் இருவருக்கும் படங்களில் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் நட்பாகப் பழகி வந்தார்கள். வடபழனியில் தான் ரவி தங்கியிருந்த வீடு உள்ளது. இவர் தேவி வீட்டுக்கு அடிக்கடி சென்று உள்ளார். இதனால் தேவியின் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. உடனே தேவியும் வீட்டுக்கு வரவேண்டாம் என்று ரவியிடம் சொல்லியும் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. இதனால் சில தினங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தேவி தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார். இந்த சமயத்தில் தான் தேவியின் பழைய வீட்டின் முகவரியை ரவி தெரிந்து கொண்டு சென்று உள்ளார்.

இதையும் பாருங்க : 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான பெட்டராப் பாடலுக்கு மேடையில் தற்போது நடனமாடிய வடிவேலு. வைரலாகும் வீடியோ.

ஆனால், அங்கு தேவியில்லாமல் அவரின் தங்கை லட்சுமி தான் இருந்தார். கொளத்தூர் ராஜீவ்காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் லக்ஷ்மி. இவருடைய கணவர் சவுரியார். இவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர். ஒரு நாள் நள்ளிரவில் லட்சுமியின் வீட்டு கதவை ரவி தட்டியுள்ளார். யாரென்று லட்சுமியும் கேட்டுள்ளார்? எந்த பதிலும் கூறாமல் லட்சுமியின் வீட்டு கதவை தட்டிக் கொண்டே இருந்து உள்ளார் ரவி. பின் கதவை திறந்து யார் என்று கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் ரவி. வீட்டுக்குள் நுழைந்த ரவி லட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். உடனே லட்சுமியின் கணவர் மற்றும் குழந்தைகள் விழித்துக் கொண்டனர். திடீரென்று ரவி லட்சுமி குழந்தையின் கழுத்தை நெரிக்க தொடங்கினார்.

நீ உன்னுடைய அக்கா முகவரி சொல்லவில்லை என்றால் உன் குழந்தையை கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் சவுரியார், லட்சுமி இருவரும் தேவிக்கு போன் செய்தார்கள். பிறகு தேவியும், அவருடைய கணவர் சங்கரும், லட்சுமியின் வீட்டிற்கு வந்தார்கள். ரவி நான் இங்கு வந்துள்ளதே உனக்காக தான் என்று தேவியிடம் கூறினார். லட்சுமி, தேவி,சங்கர் அனைவரும் ரவியிடம் சண்டை போட்டு உடனே வீட்டை விட்டு வெளியே போ என்று கூறினார்கள். ஆனால், ரவி போகாமல் தகராறு செய்து கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ரவியை அடித்து வெளியே தள்ளினார்கள். அதனால் கோபமடைந்த ரவி பெரிய ரகளை செய்தார். இதனால் ஆத்திரமடைந்து லட்சுமி,தேவி குடும்பத்தினர் உருட்டுக்கட்டை, சுத்தியால் ரவியை தாக்கினார்கள்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ரவி கீழே விழுந்து விட்டார். பின்னர் ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மருத்துவர்கள் ரவி இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரவியை கொலை செய்த குற்றத்துக்காக தேவி,லட்சுமி,சவுரியர், சங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் கொலை செய்தது உறுதி ஆனது. பின் இவர்களை சிறையில் அடைத்து உள்ளார்கள்.

behindtalkies AMP · Quick view
View full