25 ஆண்டுகளுக்கு முன் வெளியான பெட்டராப் பாடலுக்கு மேடையில் தற்போது நடனமாடிய வடிவேலு. வைரலாகும் வீடியோ.

0
46017
vadivelu
- Advertisement -

வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கள் இன்றளவும் பலரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வடிவேலு கடந்த சில காலமாக திரைப்படத்தில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடி டெம்ப்லட்டுகள் தான் மீம் கிரியேட்டரகளுக்கு் ஒரு பூஸ்ட் என்றும் கூறலாம். வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு தலைவரின் காமெடி வசனங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை ஆட்சி செய்து வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் வடிவேலு கடந்து வந்த பாதை அத்தனை எளிதல்ல. நடிகர் வடிவேலுவும் கடந்த சில மாதமாக தடையில் இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தான்.

இதையும் பாருங்க : பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிக் பாஸ் சீசன் 1 நடிகருக்கு வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன்.

- Advertisement -

இந்த விஷயத்தில் சங்கர் மற்றும் வடிவேலுக்கு இழுவை நீண்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் வடிவேலு ஒரு சில படங்களில் தலை காண்பித்து வருகிறார். சமீபத்தில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சன் குடும்பம் விருது விழாவில் லாரன்சுடன் சேர்ந்து வடிவேலு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, ரகுவரன், வடிவேலு போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் பெட்டராப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான பட்டாரா பாடலுக்கு மேடையில் தற்போது வடிவேலு நடனமாடி இருக்கிறார்

-விளம்பரம்-

Advertisement