கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சிவகாமி சீரியலை இயக்கிய இயக்குனர் ஜெய் அமர் சிங்கின் முதல் படமாக “காலேஜ் ரோடு” திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக மோனிகா சின்னகோட்லா நடித்திருக்கிறார், இவர் ஏற்கனவே நண்பன் ஒருவன் வந்த பிறகு, ஜி வி பிரகாஷ் நடித்திருந்த பேச்சுலர், டாடா போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார், மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆனந்த் நாக், பொம்மு லக்ஷ்மி மற்றும் பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதனை பார்க்கலாம் வாருங்கள்.

கதைக்களம் :

தேனீ அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்த பின்னர் மேல் படிப்பு படிக்க கடன் வாங்கி படிக்கின்றனர், வங்கிற்கு கட்ட வேண்டிய வட்டி காட்டவில்லை என்று அவர்களது ஊரில் போஸ்டர் அடித்து ஓடுகிறது. இதனால் அவரது குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. இது ஒருபக்கம் இருக்க கதாநாயகன் லிங்கேஸ் ஒரு பெரிய கல்லுரியில் படித்து வருகிறார். இவர் மேலும் படிப்பதற்கு பணம் தேவை. இந்தநிலையில் இவர் ரிவர்ஸ் ஹேக்கிங் என்ற ப்ராஜெக்ட் செய்கிறார். ஆனால் அங்கே வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அப்படி ஒரு கொள்ளையை லிங்கேஷ் பார்த்து விடுகிறார். எனவே இவரை வைத்து கொள்ளையர்களை போலீசார் பிடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்நிலையில் எதற்காக கொள்ளை நடக்கிறது?, யார் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்?, அப்படி கொள்ளையடித்த பணத்தை என்ன செய்கிரார்கள்? என்பதுதான் மீதி கதை.

Advertisement

இப்படத்தில் தற்போதும் சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள். அதாவது பணம் என்று ஓன்று இருந்தால் போதும் கல்வியை விளக்கி வாங்கிவிடலாம் என்று கருத்து முன்வைக்கப்படுகிறது. படத்தில் கதாநாயகனாக நடித்த லிங்கேஷ்கும் கதாநாயகியாக நடித்த மோனிகாவும் உண்மையாகவே அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர் அந்த அளவிற்கு நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். மீதமுள்ள கதாபாத்திரங்களில் தங்களுடைய வேலையே சரியாக செய்திருக்கின்றனர்.

மேலும் படத்தில் முதல் பாதி, திருடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் அற்புதமாகவே அமைத்திருக்கின்றது. திரைக்கதை பலமாக இருந்தாலும் படத்தை எடுத்த விதத்தில் இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம். அதே போல பின்னணி இசை சரியாக இல்லாமல் இருந்தாலும் பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. மேலும் படத்தில் வரும் சில காட்சிகள் போர் அடிக்குமாறு இருந்தன, காமெடி நாம் மற்ற படங்களில் பார்க்கும் வழக்கமான காமெடியை போல தான் இருந்தது. ஒளிப்பதிவு, உருவாக்கிய விதம் இவற்றை கொஞ்சம் தொய்வு இருந்தாலும் படத்தில் சொல்லப்பட்ட கருத்தும், இப்படத்தை எடுக்க முயற்ச்சி செய்த்தும் கண்டிப்பாக வரவேற்க கூடியது.

Advertisement

நிறை :

அணைத்து கதாபாத்திரங்களிலன் நடிப்பும் நன்றாக இருந்தது.

Advertisement

தரமான கன்டென்ட்.

கதைகளம் பிரமாதம்.

குறை :

படத்தின் டப்பிங்க் சரியில்லை.

இப்படத்தை இன்னனும் நன்றாக எடுத்திருக்கலாம்.

சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தின் வழியாக கூறியது தரமாம கன்டென்ட் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

Advertisement