அன்புடன் குஷி சீரியலின் புதிய ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள கலர்ஸ் தமிழ் நடிகை. யார் தெரியுமா ?

0
2751
anbudankushi
- Advertisement -

அன்புடன் குஷி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த இரண்டாம் நடிகையும் தற்போது அந்த சீரியலில் இருந்து விளகியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் நடிகர் ப்ரஜின் பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவேளிக்கு பின்னர் “அன்புடன் குஷி” என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு நடிகர் ப்ரஜின் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக இவர் நடித்து வரும் “அன்புடன் குஷி” சீரியல் காதல் கதை அம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.

-விளம்பரம்-

ப்ரஜின், லோகேஷ் பாஸ்கரன், மீரா கிருஷ்ணா, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சீனு, கவுசல்யா செந்தாமரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த சீரியலில் முதலில் பிரஜனுக்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த மான்ஷி என்பவர் நடித்து வந்தார். ஆனால், இந்த சீரியல் துவங்கிய ஒரு சில மாதத்திலேயே மான்ஷி இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார்.

இதையும் பாருங்க : வரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா ? வைரலாகும் வீடியோ

- Advertisement -

பின் அவருக்கு பதிலாக குஷி கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் கமிட் ஆனார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ரேஷ்மா வெங்கடேஷும் விலகியுள்ளார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேஷ்மா வெங்கடேஷ், நான் அன்புடன் குஷி தொடரிலிருந்து விலகுகிறேன். இனி என்னை அத்தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது. அந்தக் கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்கிறேன். அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் புதிய குஷியாக திருமணம் சீரியல் நடிகை ஷ்ரேயா என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே திருமணம் சீரியலில் நடித்த இவரது காதலர் சித்து ராஜா ராணி 2 மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். தற்போது சித்துவின் காதலியும் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இன்றிலிருந்து ஷ்ரேயாவை புதிய குஷியாக நீங்கள் கண்டு கழிக்கலாம்.

-விளம்பரம்-
Advertisement