சொல்லாமல் கொள்ளாமல் காதல் திருமணம் செய்து கொண்ட கலர்ஸ் டிவி சீரியல் நடிகை.

0
22521
Mahalakshmi
- Advertisement -

சிவகாமி சீரியல் நடிகைக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்து உள்ளது. மேலும், இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் பல பேருக்கு திருமணம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென இடத்தை பிடித்தவர் நடிகை மகாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப் படங்களில் நடித்தவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். பின் பல மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நீண்ட காலமாக காதலித்து வந்தவரை தற்போது திருமணம் செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for actress maha lakshmi marriage

- Advertisement -

மேலும், நடிகை மகாலட்சுமி அவர்கள் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சிவகாமி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடரில் தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தவர். அது மட்டும்இல்லாமல் தெலுங்கில் நடிகை மகாலக்ஷ்மி அவர்கள் ‘அர்த்தநாரி’ என்ற திரைப் படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு குறித்து பாராட்டாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு இருந்தது. மேலும், நடிகை மகாலட்சுமி அவர்கள் நீர்மேல் கிருஷ்ணா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நடிகை மகாலட்சுமி மற்றும் நிர்மலா கிருஷ்ணாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோலாகலமாக நடை பெற்றது. இதில் பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். அதோடு மணப்பெண் அலங்காரத்தில் நடிகை மகாலட்சுமி அவர்கள் பயங்கர பொலிவாகவும் அழகாகவும் உள்ளார். அது மட்டும் இல்லாமல் மணப்பெண் கோலத்தில் அவரை பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகு கண்ணைக் கவர வைத்து உள்ளது. மேலும், மகாலட்சுமி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவருடைய அழகு உள்ளது என்றும் பல பேர் அவரை பாராட்டி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for actress maha lakshmi marriage

மேலும், நடிகைகள் பீனா ஆண்டனி, விந்துஜா மேனன் உள்ளிட்ட பல பேர் நடிகை மகாலக்ஷ்மி திருமணத்திற்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்தினர்கள். மகாலட்சுமி, நிர்மல் கிருஷ்ணா அவர்களின் திருமண வீடியோ யூடியூபில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது. அதோடு மகாலட்சுமி, நிர்மல் கிருஷ்ணா அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களின் திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொல்லமால் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டாலும் தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

Advertisement