அன்று விஜய்யை கலாய்த்துவிட்டு இன்று அவர் பட டைட்டிலேயே வைத்த கோமாளி இயக்குனர் - திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.

By Siva · 4/7/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் கோமாளி. இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரதீப் இயக்கியிருந்தார். வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதோடு 90's மற்றும் 80's கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டும் விதமாக இந்தப் படம் அமைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. கோமாளி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கனதன் அடுத்து எந்தப் படத்தை இயக்கப்போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையும் பாருங்க : பாத்ரூமில் நீர்வீழ்ச்சி, இன்டீரியர் மட்டும் இத்தனை கோடி - திருமணத்திற்கு பின் பிரம்மாண்ட வீட்டை கட்டி வரும் நயன்.

விஜய் படத்தின் தலைப்பு :

ஆனால், இவர் விஜய் மற்றும் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. பின் இவரே ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் வேலையில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு விஜய் படத்தின் தலைப்பான லவ் டுடே என்று வைக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு நன்றி தெரிவித்த பிரதீப் :

இந்த தலைப்பை கொடுத்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், லவ் டுடே படத்தின் தலைப்பை கொடுத்த ஆர்பி சவுத்ரி மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி என்று படத்தின் ஹீரோ பிரதீப் டீவ்ட் போட்டிருக்கிறார். தற்போது இவரின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் குறித்து பிரதீப் பேசி இருந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய்யை கலாய்த்து போட்ட ட்வீட் :

அதுஎன்னவென்றால், 2014 ஆம் ஆண்டு ட்விட்டரில் பிரதீப் அவர்கள் விஜய் படத்தை கலாய்த்து சில பதிவுகள் போட்டு இருந்தார். ரஜினி லிங்கா படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால், விஜய்யின் கத்தி படத்திற்கு முதல் நாள் எளிதாக டிக்கெட் கிடைத்தது என்றும், ஜில்லா படத்தின் டப்பிங் சுறா படத்தை விட மோசமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

விமர்சிக்கும் ரசிகர்கள் :

இப்படி விஜயை குறித்து மோசமாக பதிவிட்டு தற்போது விஜய்க்கு நன்றி சொல்லி போட்ட இந்த இரண்டு பதிவுகளும் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை நெட்டிசன்கள்,ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து பிரதீப்பை விமர்சித்தும் வருகிறார்கள். இதற்கு பிரதீப் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full