பாத்ரூமில் நீர்வீழ்ச்சி, இன்டீரியர் மட்டும் இத்தனை கோடி – திருமணத்திற்கு பின் பிரம்மாண்ட வீட்டை கட்டி வரும் நயன்.

0
750
nayanthara
- Advertisement -

ஆடம்பரமாக கோடிக்கணக்கில் கட்டப்படும் நயன் மற்றும் விக்கியின் புது வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகையை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-
nayanthara

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : லண்டனில் தந்தைக்கு தெரியாமல் ரிஜெஸ்டர் மேரேஜ், சிம்ப்ளிளாக நடந்த இரண்டாம் மேரேஜ். யுவனின் முதல் இரண்டு மனைவி யார் தெரியுமா ? ?

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் நயன் கமிட்டாகி இருந்தாலும் தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று கொண்டு இருந்தார். அதோடு தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் :

இதனால் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயமாக இருந்தது. அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். கடந்த மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.

திருமணத்திற்கு பின் நயன்- விக்கி:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு இருந்தார்கள். தற்போது இருவரும் படத்தின் வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் நயன்- விக்கி கட்டப்படும் வீடு குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஏற்கனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஹைத்ராபாத்தில் உள்ள நயனின் வீடு

நயன்- விக்கி கட்டப்படும் வீடு :

அதில் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை வாங்கியிருக்கிறார்கள். இதனிடையே அந்த வீட்டின் இன்டீரியர் டிசைன் வேலைக்காக மும்பையை சேர்ந்த குழுவை வரவழைத்து இருக்கிறார்கள் .அந்த வீட்டின் இன்டீரியர் டிசைன் மதிப்பு 25 கோடியாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டின் பாத்ரூமில் நீர்வீழ்ச்சி அம்சங்களுடன் சுமார் 1500 sq ft-ல் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நயன் மற்றும் விக்கி கட்டப்படும் புதுவீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது

Advertisement