புகைப்படத்திற்கு ஏற்ற மாதிரி கேப்ஷனை கூட தலை கீழாக எழுதிய கோமாளி பட நடிகை.

0
1687
samyuktha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி உள்ளார். இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ளார் இயக்குனர்.மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

மேலும், சஇந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

மேலும் இந்த படத்தை காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய நட்பு தேவி என்பவர் இயக்குகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதே போல ஃபிட்னஸ் ஃப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் உடையில் தலைகீழாக தொங்கிய படிய விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அம்மனி. மேலும், அதற்கு ஏற்றார் போல கேப்ஷனை கூட தலை கீழாக எழுதி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement