நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் பல்வேறு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பலர் ‘ரெம்டெசிவிர் ‘ மருந்திற்காக பல மணி நேரம் காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பெற்றோர்களை காப்பாற்ற உதவி கேட்டுள்ளார் கோமாளி பட நடிகை.

இதையும் பாருங்க : ரோஜா சீரியல் நடிகருக்கு என்ன ஆனது, ரசிகர்கள் கவலை. (ஏன் எல்லாரும் அவருக்கு ஆறுதல் சொல்றாங்க)

Advertisement

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிளாஸ் பேக் காட்சியில் பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார். பெங்களூரில் வசித்து வருகிறார். தற்போது அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற ரெம்டெசிவிர் மருந்து தாருங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் முதியவர்கள் என்பதால் மருத்துவமனைக்கு செல்ல அச்சப்படுகிறார்கள். அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் உயிரை காப்பாற்ற ரெம்டெசிவிர் மருந்து வேண்டும். நான் தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டுவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. எனக்கு 6 டோஸ் மருந்து வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் எனக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement