தனிமைபட்டுள்ள நாளில் அரை குறை ஆடையில் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை.

0
71893
Samyuktha
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 743 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான்.

-விளம்பரம்-

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.

- Advertisement -

வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் புத்தகங்கள் படிப்பது, பெயிண்டிங் பண்ணுவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஜோக்ஸ், மீம்ஸ், சமைப்பது மற்றும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வது என்று பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தனிமையை போக்க கோமாளி பட நடிகை புது ஐடியா கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா.

-விளம்பரம்-

கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தனிமைபட்டிருக்கும் அம்மணி அரை குறை ஆடையில் நடனமாடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement