அடேங்கப்பா, கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டியா இது – இன்ஸ்டாகிராமில் வழியும் கிளாமர்.

0
31824
kavitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி உள்ளார். இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளார். 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ளார் இயக்குனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இந்த பஜ்ஜி கடை காமெடி நகைச்சுவைக்கு மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதைக்கு ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகை ஆவார்.இவர் இந்தியில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் விலங்குகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் நடிகை கவிதா ராதேஷியாம் அவர்கள் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இன் போட்டியாளராக கலந்து கொண்டார்.மேலும், இவர், இந்தியில் கவிதா பாபி என்ற ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வருகிறார். 18 + வெப் சீரிஸ்சான இந்த வலைதள தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று சீசன் 1,2 என்று போய்கொண்டே இருக்கிறது. மேலும், இந்த தொடரில் நடிகை கவிதா அரை நிர்வாணா காட்சிகளில் கூட நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement