பாத்ரூமில் நேர்ந்த கொடூரம். பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.

0
34140
jayachandiran
- Advertisement -

கடந்த சில காலமாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு துயர சம்பவங்கள் நடந்தேறி வருகிறது அதிலும் குறிப்பாக பல்வேறு நடிகர்களின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு திரைப்பட நடிகர்கள் இறந்து போன செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் தமிழ் சினிமா துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது தமிழில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயச்சந்திரன் குறிப்பாக வடிவேலுவின் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for காமெடி நடிகர் ஜெயச்சந்திரன்"

உடுமலைப் பேட்டையைச் பூர்வீகமாக கொண்ட நடிகர் ஜெயச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமா மீது கொண்ட ஆசையால் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஜெயச்சந்திரன் பின்னர் முக்கிய காமெடி நடிகர்களின் படத்தில் துணை காமெடி நடிகராக நடித்திருந்தார் அதிலும் குறிப்பாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் வடிவேலுவின் ஒரு குறிப்பிட்ட காமெடியில் நடித்திருப்பார் அந்த காமெடி காட்சியில் ரத்த காயத்துடன் ஜெயச்சந்திரன் வடிவேலுவிடம் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இருந்தேன் அப்போது ஒரு நாள் உரையில் தனது கழுத்தில் ஏறி சென்றது என்று கூறும் வசனம் மிகவும் பிரபலம்.

இதையும் பாருங்க : கமல் ரஜினிக்கு ஜோடியாக நடித்த 80ஸ் நடிகை. ஈ, எறும்புகள் மொய்த்து இறந்த சோகம்.

- Advertisement -

இவரது நடிப்பைப் பார்த்து இயக்குனர் ஹரி இவருக்கு பல்வேறு படங்களில் வாய்ப்பை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் ஜெயச்சந்திரன் குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மூத்திரக்காய் என்ற திரைப்படத்தில் படம் முழுவதும் முக்கிய காமெடியனாக நடித்திருக்கிறார் ஜெயச்சந்திரன். அந்தப் படத்திற்குப் பின்னர் நடிகர் ஜெயச்சந்திரன் பெரும்பாலும் எந்த படத்திலும் காண முடியவில்லை.

66 வயதான நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த சில வருடங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயச்சந்திரன் ஒரு படபிடிப்பில் இருந்துள்ளார். இரவு பகலாக நடந்த அந்த படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார். பின்னர் தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை வீட்டில் இருந்தவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறி இருக்கிறார் நடிகர் ஜெயச்சந்திரன். அப்படி சொல்லிவிட்டு வீட்டிலிருந்த பாத்ரூமுக்கு சென்று ஜெயச்சந்திரன் அங்கே வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டு இருக்கிறது.

-விளம்பரம்-
jayachandiran

ஜெயச்சந்திரன் மயங்கி விழுந்ததை பார்த்து பதறிபோனதால், உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாம்.ஜெயச்சந்திரனின் மனைவி பெயர் லக்ஷ்மி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சென்னை விஜயராகவபுரத்தில் உள்ள ஜெயச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று பிற்பகலில் வந்த ராதாரவி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடலடக்கம் இன்று மதியம் ஒரு மணியளவில் நடக்கவிருக்கிறது. மேலும், பல்வேறு பிரபலங்களும் ஜெயச்சந்திரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Advertisement