.

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து அசத்தியவர் காமெடி நடிகர் கிங் காங். இவருடைய உண்மையான பெயர் சங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அதிசய பிறவி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் கிங் காங். சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் ஆடிய பிரேக் டான்ஸ் இன்று பார்த்தால் கூட நகைச்சுவை வரும். அந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இவர் 5 மொழிகளில் 300கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சினிமாவில் பல்வேறு விருதுகளை வாங்கிய இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாது கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் படத்தையும் அளித்து. நடிகர் கிங் காங், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகர் கிங்காங் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தன்னுடைய சினிமா பயணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது, நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்து இருக்கிறேன். பள்ளி படிக்கும் போதே என்னுடைய உருவத்தையும், என்னுடைய கண்ணையும் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. சில நேரம் நான் அழுதும், வருத்தப்பட்டும் இருக்கிறேன். பிறகு தான் நாம் ஏன் கவலைப்படணும்? என என மனதுக்குள் கேள்வி எழுந்தது. என்னிடம் உள்ள குறைகளை மறைத்து விட்டு என்னிடம் இருக்கிற நிறையை வெளிப்படுத்த வேண்டும் எனக்கு தோன்றியது. என்னால் என்ன பண்ண முடியும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

இதையும் பாருங்க : பைக்கில் படு மோசமான வசனம். திரௌபதி இயக்குனரின் பதிவால் நடவடிக்கை எடுத்த காவல் துறை. நன்றி தெரிவித்த இயக்குனர்.

Advertisement

அப்போது தான் பக்கத்து ஊரில் எனக்கு தெரிந்தவர் நாடக கம்பெனி ஒன்று ஆரம்பித்து இருந்தார். அவர் என்னுடைய பெற்றோர்களிடம் வந்து உங்கள் மகனை பபூன் கதாபாத்திரத்திற்கு அழகாக இருப்பார் அதனால் நடிக்க அனுப்புங்கள் என்று சொன்னார். முதலில் என் பெற்றோர்கள் மறுத்தார்கள். அதற்கப்புறம் தான் சம்மதித்து என்னை நாடகத்தில் சேர்த்து விட்டார்கள். நான் என்னுடைய 13 வயதில் நாடகத்துறையில் சேர்ந்தேன். நான் வாங்கின முதல் சம்பளம் 5 ரூபாய். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். என்னை எல்லோரும் ஐயாரெட்டு என்று தான் அழைப்பார்கள்.பல நாடகங்களில் என்னுடைய திறமையை பார்த்து பலர் பாராட்டி சினிமாவிற்குள் செல் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு தான் நான் சினிமாவில் நுழைய ஆரம்பித்தேன்.

Advertisement
தனது குடும்பத்தின் கிங் காங்.

கலைப்புலி சேகர் அவர்கள் தான் என்னுடைய பெயரை கிங்காங் என்று வைத்தார். கிங்காங் என்றால் பிரம்மாண்டம் என்று பொருள். நீ பார்க்க சிருசுனாலும் உன்னுடைய நடிப்பு பிரம்மாண்டமாக இருக்கனும் என்று சொன்னார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிசியபிறவி படத்தின் மூலம் தான் நான் மக்கள் மத்தியில் பிரபலமானேன். கமல் சார், ஆனந்த் பாபு சர் இவர்களுடைய படங்களைப் பார்த்து தான் நான் நடனமாக கற்றுக் கொண்டேன். பிறகு மகராஜன் படத்தின் போது தான் நான் வடிவேல் அவர்களுடன் இணைந்து படங்களில் பண்ண தொடங்கினேன். நான் இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்து இருப்பேன். ஆனால், நான் நல்லா பிரபலமானது வடிவேல் சாருடன் நடித்த படங்கள் மூலம் தான். இப்போது நான் அரசியல் சதுரங்கம் என்று சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல் ஸ்டேஜ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். பல மொழியில் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்து உள்ளேன் என்று கூறினார்.

Advertisement