பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் நடித்துள்ள திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இது தான் இருந்தது.
அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கூறி பல பிரச்சனைகளை செய்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 4 மில்லியன் வியூஸ் மேல் கடந்து உள்ளது.
இதையும் பாருங்க : 96 படத்தில் திரிஷாவின் மஞ்சள் நிற குர்தாவை போல, ட்ரெண்டாகும் ஜானு புடவை. நீங்களே பாருங்க.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அஜித்துடன் இயக்குனர் மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் இந்த படத்தினை அஜித் ஆதரிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம். சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.
மேலும், இந்த படத்தின் மூலம் நாடக காதல் குறித்து தான் அழுத்தமாக தெரிவித்திருப்பதாக இயக்குனர் மோகன் கூறி வருகிறார். இந்த நிலையில் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு வாலிபர் தன்னுடைய பைக்கின் பின்புற மட் கார்டில் மிகவும் ஆபாசமான வசனம் ஒன்றை எழுதி சுற்றி திரிந்துள்ளதை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த பதிவு தீயாக பரவ, பலரும் அந்த வண்டியின் பைக் நம்பரை வைத்து விலாசத்தை பதவிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை பிடித்து ரிவிட் அடித்துள்ளது காவல் துறை. இதனால் அந்த வசனத்தை தனது பைக்கில் இருந்து நீக்கியுள்ளார் அந்த வாலிபர்.