என்னது காதல் திருமணமா. காமெடி நடிகர் சதீஸின் மச்சான் சொன்ன பதில்.

By Rajkumar · 27/11/2019

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி குறைந்து போன நிலையில் தற்போது பல்வேறு காமெடி நடிகர்கள் அக்கரமித்துள்ளனர். அந்த வகையில் காமெடி நடிகர் சதீசும் ஒருவர். காமெடி நடிகர் சதீஸ் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

மேலும், இவர் கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இது பலரும் அறிந்திடாத ஒரு சிஷயம். மேலும் நடிகர் சதீஸ் 2003 ஆம் ஆண்டு வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.

இதையும் பாருங்க : இந்தியன் மற்றும் புதுப்பேட்டை பட நடிகர் காலமானார். திரையுலகினர் அஞ்சலி.

தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால் சதீஷை மற்ற நடிகர்களும் சதீஸ் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடிகர் சதீசுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானது.

https://twitter.com/chachi_dir/status/1198142970970529795

மேலும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் சகோதரியை நடிகர் சதீஸ் திருமணம் செய்ய உள்ளார். மேலும், இது காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சதீஷின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்றும் இது முழுமையான அரேஞ்சு மேரேஜ் என்று மணப்பெண்ணின் சகோதரரான சாச்சா ட்வீட் செய்துள்ளார்.

இது புறம் இருக்க திருமண நிச்சயதார்த்தம் முடிந்து தனது திருமண தேதியை அறிவிக்காமல் இருந்தார் சதீஷ். இந்த நிலையில் நடிகர் சதீஷின் திருமணம் வருகிறதா டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. சமீபத்தில் நடிகர் சதீஷ் தனது திருமண பத்திரிகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பை விடுத்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full