இந்தியன் மற்றும் புதுப்பேட்டை பட நடிகர் காலமானார். திரையுலகினர் அஞ்சலி.

0
2633
bala-singh

தமிழில் இந்தியன், புதுக்கேட்டை, மகாமுனி, என் ஜி கே போன்ற பல படங்களில் நடித்த பாலா சிங் இன்று(நவம்பர் 27) காலமாகியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாலா சிங் அவர்கள் மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகம் ஆனார். பின் இவர் குணச் சித்திர வேடத்தில் தான் அதிகம் நடித்தார். ஆனால், இவருக்கு தமிழ் திரை உலகின் மூலம் தான் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும், தமிழில் நடிகர் நாசர் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த “அவதாரம்” என்ற படத்தின் மூலம் தான் நடிகர் பாலா சிங் அறிமுகமானார்.

என்.ஜி.கே பட காட்சி

- Advertisement -

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், முதல் படத்திலே இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இந்தியன், ராசி, உல்லாசம், சிம்மராசி, கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, விருமாண்டி, சாமி, ஜிகிர்தண்டா, போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் குணச் சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : நான் என்ன மோசமான நடிகரா? எனக்கு அழைப்பு வரவில்லை. புலம்பிய 80ஸ் நடிகர். ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.

மேலும், இந்த படங்களுக்கு பிறகு மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே படத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவா பாராட்டப்பட்டது என்றும் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து நடிகர் பாலா சிங் அவர்கள் “சர்வம் தாளமயம்”, “சாமி ஸ்கொயர்”, “தானா சேர்ந்த கூட்டம்”, மகாமுனி என பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
பாலா சிங்

நடிகர் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பின் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் இவருக்கு ஏற்பட்டது. மேலும்,உடனே இவரை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு காலமாகி விட்டார். இவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement