தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

மேலும், இவர் கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.

இதையும் பாருங்க : இன்னொரு ஆசிட் முட்டை அடிக்கணும். மிரட்டிய நபரை பிகில் பட நடிகை என்ன செய்தார் பாருங்க.

Advertisement

தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.

Advertisement

இதனால் கீர்த்தி சுரேஷுக்கு சதீஷுக்கு திருமணம் முடிந்ததாக கூட ஒரு வதந்தி பரவியது. இதனால் சதீஷை மற்ற நடிகர்களும் சதீஸ் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கிடலுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சதீஸ். ஆம், சதீஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது

Advertisement

கடந்த செப்டம்பர் மாதம், சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் ‘சிறிய இடைவேளைக்கு பின்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து தனது திருமண தேதியை அறிவிக்காமல் இருந்தார் சதீஷ். இந்த நிலையில் நடிகர் சதீஷின் திருமணம் வருகிறதா டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. சமீபத்தில் நடிகர் சதீஷ் தனது திருமண பத்திரிகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பை விடுத்துள்ளார்.

Advertisement