இன்னொரு ஆசிட் முட்டை அடிக்கணும். மிரட்டிய நபரை பிகில் பட நடிகை என்ன செய்தார் பாருங்க.

0
39000
reba-monika
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்திரஜா, இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த பல்வேறு புது முக நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் இளம் நடிகையான ரேபா மோனிகா ஜானும் ஒருவர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B5Ap55GHIUQ/

இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார். இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும்.

இதையும் பாருங்க : குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித். இணையத்தில் வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இதனால் மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகை ரேபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு பலரும் பல விதமான கமன்ட்களை செய்து வந்தனர்.

ஆனால், இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சா தான் சரிப்பட்டு வருவ’ என்று மோசமாக கமன்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த ரேபா ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சிம்பிளாக கூறிவிட்டார். இதற்கு மற்ற இன்ஸ்டாகிராம் வாசிகள், இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் சொல்லாதீங்க என்று கூறினார்கள். ஆனால், அந்த நபரை ஏற்கனவே பிளாக் செய்து விட்டேன் என்று ரேபா மோனிகா கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement